Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 14:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 14 ஏசாயா 14:19

ஏசாயா 14:19
நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்.

Tamil Indian Revised Version
நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் ஆடையைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்கு வெளியே எறிந்துவிடப்பட்டாய்.

Tamil Easy Reading Version
ஆனால் தீய அரசனான நீ, உனது கல்லறையிலிருந்து தூக்கி எறியப்பட்டாய். நீ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளையைப் போல் வெட்டித் தூர எறியப்பட்டாய். நீ போர்க்களத்தில் விழுந்து மரித்த மனிதனைப் போலிருக்க மற்ற வீரர்கள் மிதித்துக்கொண்டு சென்றனர். இப்பொழுது, நீ மற்ற மரித்த மனிதர்களைப் போலிருக்கிறாய். கல்லறைத் துணிகளுக்குள் விழுந்து கிடக்கிறாய்.

திருவிவிலியம்
⁽நீயோ, அருவருப்பான␢ அழுகிய இலைபோல,␢ உன் கல்லறையிலிருந்து␢ வெளியே வீசப்பட்டிருக்கிறாய்;␢ வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு,␢ நாற்றமெடுத்த பிணம்போலக்␢ கிடக்கின்றாய்.⁾

Isaiah 14:18Isaiah 14Isaiah 14:20

King James Version (KJV)
But thou art cast out of thy grave like an abominable branch, and as the raiment of those that are slain, thrust through with a sword, that go down to the stones of the pit; as a carcase trodden under feet.

American Standard Version (ASV)
But thou art cast forth away from thy sepulchre like an abominable branch, clothed with the slain, that are thrust through with the sword, that go down to the stones of the pit; as a dead body trodden under foot.

Bible in Basic English (BBE)
But you, like a birth before its time, are stretched out with no resting-place in the earth; clothed with the bodies of the dead who have been put to the sword, who go down to the lowest parts of the underworld; a dead body, crushed under foot.

Darby English Bible (DBY)
but thou art cast out of thy grave like an abominable branch, covered with the slain — those thrust through with the sword, that go down to the stones of the pit: like a carcase trodden under foot.

World English Bible (WEB)
But you are cast forth away from your tomb like an abominable branch, clothed with the slain, who are thrust through with the sword, who go down to the stones of the pit; as a dead body trodden under foot.

Young’s Literal Translation (YLT)
And — thou hast been cast out of thy grave, As an abominable branch, raiment of the slain, Thrust through ones of the sword, Going down unto the sons of the pit, As a carcase trodden down.

ஏசாயா Isaiah 14:19
நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்.
But thou art cast out of thy grave like an abominable branch, and as the raiment of those that are slain, thrust through with a sword, that go down to the stones of the pit; as a carcase trodden under feet.

וְאַתָּ֞הwĕʾattâveh-ah-TA
הָשְׁלַ֤כְתָּhošlaktāhohsh-LAHK-ta
מִֽקִּבְרְךָ֙miqqibrĕkāmee-keev-reh-HA
כְּנֵ֣צֶרkĕnēṣerkeh-NAY-tser
נִתְעָ֔בnitʿābneet-AV
לְבֻ֥שׁlĕbušleh-VOOSH
הֲרֻגִ֖יםhărugîmhuh-roo-ɡEEM
מְטֹ֣עֲנֵיmĕṭōʿănêmeh-TOH-uh-nay
חָ֑רֶבḥārebHA-rev
יוֹרְדֵ֥יyôrĕdêyoh-reh-DAY
אֶלʾelel
אַבְנֵיʾabnêav-NAY
ב֖וֹרbôrvore
כְּפֶ֥גֶרkĕpegerkeh-FEH-ɡer
מוּבָֽס׃mûbāsmoo-VAHS

இணை வசனம்

Jeremiah 41:9
இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.

Jeremiah 41:7
அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள்.

Ezekiel 32:23
பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, ஜீவனுள்ளோருடைய தேசத்திலே செடியுண்டாக்கின அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டு விழுந்தவர்கள்தானே.

Jeremiah 22:19
ஒரு கழுதை புதைக்கப்படுகிறவண்ணமாய் அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார்.

Jeremiah 16:6
இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள் நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.

Jeremiah 8:1
அக்காலத்திலே யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், எருசலேமுடைய குடிகளின் எலும்புகளையும், அவர்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து எடுத்து,

Isaiah 22:16
உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?

2 Kings 9:34
உள்ளேபோய், புசித்துக் குடித்தபின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.

2 Kings 9:25
அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்து போடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறி வருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.

1 Kings 21:24
ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே, சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் தின்னும் என்றார்.

1 Kings 21:19
நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.


Tags நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும் பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும் ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும் காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும் உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்
ஏசாயா 14:19 Concordance ஏசாயா 14:19 Interlinear ஏசாயா 14:19 Image