எரேமியா 15:18
என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?
Tamil Indian Revised Version
என் வியாதி நீண்டகாலமாகவும், என் காயம் ஆறாத பெரிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற தண்ணீரைப்போலவும் இருப்பீரோ?
Tamil Easy Reading Version
நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்? என்று எனக்குப் புரியவில்லை. எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை? அல்லது குணப்படுத்த முடியவில்லை? என்பது எனக்குப் புரியவில்லை. கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன். நீர் ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர். நீர் ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர்.
திருவிவிலியம்
⁽எனக்கு ஏன் தீராத வேதனை?␢ குணமாகாக் கொடிய காயம்?␢ நீர் எனக்குக் கானல் நீரென,␢ ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!⁾
King James Version (KJV)
Why is my pain perpetual, and my wound incurable, which refuseth to be healed? wilt thou be altogether unto me as a liar, and as waters that fail?
American Standard Version (ASV)
Why is my pain perpetual, and my wound incurable, which refuseth to be healed? wilt thou indeed be unto me as a deceitful `brook’, as waters that fail?
Bible in Basic English (BBE)
Why is my pain unending and my wound without hope of being made well? Sorrow is mine, for you are to me as a stream offering false hope and as waters which are not certain.
Darby English Bible (DBY)
Why is my pain perpetual, and my wound incurable? It refuseth to be healed. Wilt thou be altogether unto me as a treacherous [spring], [as] waters that fail?
World English Bible (WEB)
Why is my pain perpetual, and my wound incurable, which refuses to be healed? will you indeed be to me as a deceitful [brook], as waters that fail?
Young’s Literal Translation (YLT)
Why hath my pain been perpetual? And my wound incurable? It hath refused to be healed, Thou art surely to me as a failing stream, Waters not stedfast.
எரேமியா Jeremiah 15:18
என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?
Why is my pain perpetual, and my wound incurable, which refuseth to be healed? wilt thou be altogether unto me as a liar, and as waters that fail?
| לָ֣מָּה | lāmmâ | LA-ma | |
| הָיָ֤ה | hāyâ | ha-YA | |
| כְאֵבִי֙ | kĕʾēbiy | heh-ay-VEE | |
| נֶ֔צַח | neṣaḥ | NEH-tsahk | |
| וּמַכָּתִ֖י | ûmakkātî | oo-ma-ka-TEE | |
| אֲנוּשָׁ֑ה֙ | ʾănûšāh | uh-noo-SHA | |
| מֵֽאֲנָה֙ | mēʾănāh | may-uh-NA | |
| הֵֽרָפֵ֔א | hērāpēʾ | hay-ra-FAY | |
| הָי֨וֹ | hāyô | ha-YOH | |
| תִֽהְיֶ֥ה | tihĕye | tee-heh-YEH | |
| לִי֙ | liy | lee | |
| כְּמ֣וֹ | kĕmô | keh-MOH | |
| אַכְזָ֔ב | ʾakzāb | ak-ZAHV | |
| מַ֖יִם | mayim | MA-yeem | |
| לֹ֥א | lōʾ | loh | |
| נֶאֱמָֽנוּ׃ | neʾĕmānû | neh-ay-ma-NOO |
இணை வசனம்
Jeremiah 30:15
உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.
Micah 1:9
அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.
Job 34:6
நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.
Jeremiah 30:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது.
Jeremiah 20:7
கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.
Jeremiah 14:3
அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக்காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
Lamentations 3:1
ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.
Jeremiah 14:19
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
Jeremiah 1:18
இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.
Psalm 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
Psalm 6:3
என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
Job 6:15
என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
Tags என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன் நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும் வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ
எரேமியா 15:18 Concordance எரேமியா 15:18 Interlinear எரேமியா 15:18 Image