Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 3:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 3 எரேமியா 3:2

எரேமியா 3:2
நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.

Tamil Indian Revised Version
நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்செய்யாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்திரத்தில் அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.

Tamil Easy Reading Version
“யூதாவே, மலை உச்சிமீது கண்களை ஏறெடுத்துப் பார். உன் நேசர்களோடு (பொய்த் தெய்வங்கள்) பாலின உறவுகொள்ளாத இடம் ஏதாவது இருக்கிறதா? ஒரு அரபியன் பாலைவனத்தில் காத்திருப்பதுபோன்று நீ சாலை ஓரத்தில், உன் நேசர்களுக்காகக் காத்திருந்தாய். நீ இந்த நாட்டை ‘அசுத்தம்’ பண்ணிவிட்டாய்! இது எப்படி? நீ பல தீயச் செயல்களைச் செய்தாய். எனக்கு விசுவாசமற்றவளாக இருந்தாய்.

திருவிவிலியம்
⁽உன் கண்களை உயர்த்தி␢ மொட்டை மேடுகளைப்பார்;␢ நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ?␢ பாலை நிலத்தில் அராபியனைப்போல,␢ பாதையோரங்களில் நீயும்␢ காதலர்களுக்காகக் காத்திருந்தாய்;␢ உன் விபசாரங்களாலும்␢ தீச்செயல்களாலும்␢ நாட்டைத் தீட்டுப்படுத்தினாய்.⁾

Jeremiah 3:1Jeremiah 3Jeremiah 3:3

King James Version (KJV)
Lift up thine eyes unto the high places, and see where thou hast not been lien with. In the ways hast thou sat for them, as the Arabian in the wilderness; and thou hast polluted the land with thy whoredoms and with thy wickedness.

American Standard Version (ASV)
Lift up thine eyes unto the bare heights, and see; where hast thou not been lain with? By the ways hast thou sat for them, as an Arabian in the wilderness; and thou hast polluted the land with thy whoredoms and with thy wickedness.

Bible in Basic English (BBE)
Let your eyes be lifted up to the open hilltops, and see; where have you not been taken by your lovers? You have been seated waiting for them by the wayside like an Arabian in the waste land; you have made the land unclean with your loose ways and your evil-doing.

Darby English Bible (DBY)
Lift up thine eyes unto the heights and see, where hast thou not been lain with? In the ways hast thou sat for them, as an Arab in the wilderness; and thou hast polluted the land with thy fornications and with thy wickedness.

World English Bible (WEB)
Lift up your eyes to the bare heights, and see; where have you not been lain with? By the ways have you sat for them, as an Arabian in the wilderness; and you have polluted the land with your prostitution and with your wickedness.

Young’s Literal Translation (YLT)
Lift thine eyes to the high places, and see, Where hast thou not been lain with? On the ways thou hast sat for them, As an Arab in a wilderness, And thou defilest the land, By thy fornications, and by thy wickedness.

எரேமியா Jeremiah 3:2
நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.
Lift up thine eyes unto the high places, and see where thou hast not been lien with. In the ways hast thou sat for them, as the Arabian in the wilderness; and thou hast polluted the land with thy whoredoms and with thy wickedness.

שְׂאִֽיśĕʾîseh-EE
עֵינַ֨יִךְʿênayikay-NA-yeek
עַלʿalal
שְׁפָיִ֜םšĕpāyimsheh-fa-YEEM
וּרְאִ֗יûrĕʾîoo-reh-EE
אֵיפֹה֙ʾêpōhay-FOH
לֹ֣אlōʾloh
שֻׁגַּ֔לְתְּšuggalĕtshoo-ɡA-let
עַלʿalal
דְּרָכִים֙dĕrākîmdeh-ra-HEEM
יָשַׁ֣בְתְּyāšabĕtya-SHA-vet
לָהֶ֔םlāhemla-HEM
כַּעֲרָבִ֖יkaʿărābîka-uh-ra-VEE
בַּמִּדְבָּ֑רbammidbārba-meed-BAHR
וַתַּחֲנִ֣יפִיwattaḥănîpîva-ta-huh-NEE-fee
אֶ֔רֶץʾereṣEH-rets
בִּזְנוּתַ֖יִךְbiznûtayikbeez-noo-TA-yeek
וּבְרָעָתֵֽךְ׃ûbĕrāʿātēkoo-veh-ra-ah-TAKE

இணை வசனம்

Ezekiel 16:24
நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் சகல வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டுபண்ணினாய்.

Jeremiah 2:7
செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.

Genesis 38:14
சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.

Jeremiah 3:1
ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 2:20
பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.

Deuteronomy 12:2
நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

Luke 16:23
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.

Ezekiel 20:28
அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்திலே நான் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் உயர்ந்த ஒரு மேட்டையும் தழைத்த ஒரு விருட்சத்தையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்கள் பலிகளைச் செலுத்தி, அவ்விடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்கள் காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்கள் தூபங்களைக்காட்டி, தங்கள் பானபலிகளை வார்த்தார்கள்.

Ezekiel 16:16
உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.

Ezekiel 8:4
இதோ, நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்துக்குச் சரியாக இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அங்கே விளங்கினது.

Jeremiah 7:29
நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார்.

Jeremiah 3:21
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.

Jeremiah 3:9
பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

Jeremiah 2:23
நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாயோடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.

Proverbs 23:28
அவள் கொள்ளைக்காரனைப்போல பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.

Proverbs 7:11
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை.

2 Kings 23:13
எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியரின் அருவருப்பாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி,

1 Kings 11:3
அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள்.


Tags நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார் வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து உன் வேசித்தனங்களாலும் உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்
எரேமியா 3:2 Concordance எரேமியா 3:2 Interlinear எரேமியா 3:2 Image