Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 45:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 45 எரேமியா 45:3

எரேமியா 45:3
நீ: இப்பொழுது எனக்கு ஐயோ! கர்த்தர் என் நோவைச் சஞ்சலத்தால் வர்த்திக்கப்பண்ணினார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார்.

Tamil Indian Revised Version
நீ: இப்பொழுது எனக்கு ஐயோ! கர்த்தர் என் வியாதியை சஞ்சலத்தால் பெருகச்செய்தார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார்.

Tamil Easy Reading Version
‘பாருக், நீ, “இது எனக்கு மிகவும் கொடூரமானது. கர்த்தர் எனக்குத் துக்கத்தை வேதனையோடு கொடுத்திருக்கிறார் நான் மிகவும் களைத்துப் போனேன். எனது கஷ்டத்தால் நான் தோய்ந்து போனேன். நான் இளைப்பாற முடியவில்லை”’” என்று சொன்னாய்.

திருவிவிலியம்
எனக்கு ஐயோ கேடு! ஏனெனில், ஆண்டவர் எனக்குத் துன்பத்திற்குமேல் துன்பத்தை அனுப்பியுள்ளார்; நான் கடுந்துயரில் ஆழ்ந்து தளர்வுற்றுப்போனேன். எனக்கு நிம்மதியே கிடையாது என்று நீ சொன்னாய்.

Jeremiah 45:2Jeremiah 45Jeremiah 45:4

King James Version (KJV)
Thou didst say, Woe is me now! for the LORD hath added grief to my sorrow; I fainted in my sighing, and I find no rest.

American Standard Version (ASV)
Thou didst say, Woe is me now! for Jehovah hath added sorrow to my pain; I am weary with my groaning, and I find no rest.

Bible in Basic English (BBE)
You said, Sorrow is mine! for the Lord has given me sorrow in addition to my pain; I am tired with the sound of my sorrow, and I get no rest.

Darby English Bible (DBY)
Thou didst say, Woe unto me! for Jehovah hath added grief to my sorrow; I am weary with my sighing, and I find no rest.

World English Bible (WEB)
You did say, Woe is me now! for Yahweh has added sorrow to my pain; I am weary with my groaning, and I find no rest.

Young’s Literal Translation (YLT)
`Thou hast said, Wo to me, now, for Jehovah hath added sorrow to my pain, I have been wearied with my sighing, and rest I have not found.

எரேமியா Jeremiah 45:3
நீ: இப்பொழுது எனக்கு ஐயோ! கர்த்தர் என் நோவைச் சஞ்சலத்தால் வர்த்திக்கப்பண்ணினார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார்.
Thou didst say, Woe is me now! for the LORD hath added grief to my sorrow; I fainted in my sighing, and I find no rest.

אָמַ֙רְתָּ֙ʾāmartāah-MAHR-TA
אֽוֹיʾôyoy
נָ֣אnāʾna
לִ֔יlee
כִּֽיkee
יָסַ֧ףyāsapya-SAHF
יְהוָ֛הyĕhwâyeh-VA
יָג֖וֹןyāgônya-ɡONE
עַלʿalal
מַכְאֹבִ֑יmakʾōbîmahk-oh-VEE
יָגַ֙עְתִּי֙yāgaʿtiyya-ɡA-TEE
בְּאַנְחָתִ֔יbĕʾanḥātîbeh-an-ha-TEE
וּמְנוּחָ֖הûmĕnûḥâoo-meh-noo-HA
לֹ֥אlōʾloh
מָצָֽאתִי׃māṣāʾtîma-TSA-tee

இணை வசனம்

Galatians 6:9
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

2 Corinthians 4:16
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

2 Corinthians 4:1
இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.

Jeremiah 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.

Jeremiah 15:10
என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.

Jeremiah 20:7
கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.

Lamentations 1:13
உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப் போகிறேன்.

Lamentations 1:22
அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.

Lamentations 3:1
ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.

Lamentations 3:32
அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

2 Thessalonians 3:13
சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.

Hebrews 12:3
ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்

Jeremiah 8:18
நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.

Proverbs 24:10
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது.

Genesis 42:36
அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.

Numbers 11:11
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?

Joshua 7:7
யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படி எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.

Job 16:11
தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.

Job 23:2
இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.

Psalm 6:6
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.

Psalm 27:13
நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.

Psalm 42:7
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.

Psalm 69:3
நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.

Psalm 77:3
நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவிதொய்ந்துபோயிற்று. (சேலா.)

Psalm 120:5
ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!

Genesis 37:34
தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.


Tags நீ இப்பொழுது எனக்கு ஐயோ கர்த்தர் என் நோவைச் சஞ்சலத்தால் வர்த்திக்கப்பண்ணினார் என் தவிப்பினால் இளைத்தேன் இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார்
எரேமியா 45:3 Concordance எரேமியா 45:3 Interlinear எரேமியா 45:3 Image