Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 17:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 17 நியாயாதிபதிகள் 17:3

நியாயாதிபதிகள் 17:3
அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டு பண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்பொழுதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.

Tamil Indian Revised Version
அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன்னுடைய தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டாக்க, நான் என்னுடைய கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முழுவதும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.

Tamil Easy Reading Version
மீகா 28 பவுண்டு வெள்ளியையும் தன் தாயிடம் திருப்பிக் கொடுத்தான். அப்போது அவள், “நான் இந்த வெள்ளியைக் கர்த்தருக்கு விசேஷ அன்பளிப்பாகச் செலுத்துவேன். என் மகன் ஒரு விக்கிரகத்தைச் செய்து அதை வெள்ளியால் பூசும்படியாக இதைக் கொடுப்பேன். மகனே, எனவே இப்போதே அந்த வெள்ளியை உனக்கு நான் கொடுக்கிறேன்” என்றாள்.

திருவிவிலியம்
அவர் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகளைத் தம் தாயிடம் திருப்பிக் கொடுக்க, அவர் தாய், “என் மகன் உனக்காக என் கையிலிருந்து இந்த வெள்ளிக் காசுகளை ஆண்டவருக்கு நேர்ச்சையாக அர்ப்பணிக்கின்றேன். அவற்றைக் கொண்டு செதுக்கிய உருவத்தையும் வார்ப்புச் சிலையையும் செய்துகொள். எனவே, அவற்றை இப்பொழுதே உன்னிடம் திருப்பித் தருகின்றேன்” என்றார்.

Judges 17:2Judges 17Judges 17:4

King James Version (KJV)
And when he had restored the eleven hundred shekels of silver to his mother, his mother said, I had wholly dedicated the silver unto the LORD from my hand for my son, to make a graven image and a molten image: now therefore I will restore it unto thee.

American Standard Version (ASV)
And he restored the eleven hundred `pieces’ of silver to his mother; and his mother said, I verily dedicate the silver unto Jehovah from my hand for my son, to make a graven image and a molten image: now therefore I will restore it unto thee.

Bible in Basic English (BBE)
And he gave back the eleven hundred shekels of silver to his mother, and his mother said, I have made the silver holy to the Lord from me for my son, to make a pictured image and a metal image.

Darby English Bible (DBY)
And he restored the eleven hundred pieces of silver to his mother; and his mother said, “I consecrate the silver to the LORD from my hand for my son, to make a graven image and a molten image; now therefore I will restore it to you.”

Webster’s Bible (WBT)
And when he had restored the eleven hundred shekels of silver to his mother, his mother said, I had wholly dedicated the silver to the LORD from my hand for my son, to make a graven image and a molten image: now therefore I will restore it to thee.

World English Bible (WEB)
He restored the eleven hundred [pieces] of silver to his mother; and his mother said, I most assuredly dedicate the silver to Yahweh from my hand for my son, to make an engraved image and a molten image: now therefore I will restore it to you.

Young’s Literal Translation (YLT)
And he giveth back the eleven hundred silverlings to his mother, and his mother saith, `I had certainly sanctified the silver to Jehovah, from my hand, for my son, to make a graven image, and a molten image; and now, I give it back to thee.’

நியாயாதிபதிகள் Judges 17:3
அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டு பண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்பொழுதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.
And when he had restored the eleven hundred shekels of silver to his mother, his mother said, I had wholly dedicated the silver unto the LORD from my hand for my son, to make a graven image and a molten image: now therefore I will restore it unto thee.

וַיָּ֛שֶׁבwayyāšebva-YA-shev
אֶתʾetet
אֶֽלֶףʾelepEH-lef
וּמֵאָ֥הûmēʾâoo-may-AH
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
לְאִמּ֑וֹlĕʾimmôleh-EE-moh
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
אִמּ֡וֹʾimmôEE-moh
הַקְדֵּ֣שׁhaqdēšhahk-DAYSH
הִקְדַּ֣שְׁתִּיhiqdaštîheek-DAHSH-tee
אֶתʾetet
הַכֶּסֶף֩hakkesepha-keh-SEF
לַֽיהוָ֨הlayhwâlai-VA
מִיָּדִ֜יmiyyādîmee-ya-DEE
לִבְנִ֗יlibnîleev-NEE
לַֽעֲשׂוֹת֙laʿăśôtla-uh-SOTE
פֶּ֣סֶלpeselPEH-sel
וּמַסֵּכָ֔הûmassēkâoo-ma-say-HA
וְעַתָּ֖הwĕʿattâveh-ah-TA
אֲשִׁיבֶ֥נּוּʾăšîbennûuh-shee-VEH-noo
לָֽךְ׃lāklahk

இணை வசனம்

Exodus 20:4
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

Leviticus 19:4
விக்கிரகங்களை நாடாமலும் வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Exodus 20:23
நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.

John 16:2
அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.

Habakkuk 2:18
சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதுமான விக்கிரகமும் என்னத்துக்கு உதவும்?

Jeremiah 10:8
அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.

Jeremiah 10:3
ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.

Isaiah 66:3
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.

Isaiah 44:9
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.

Isaiah 40:18
இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?

Psalm 115:4
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

Judges 18:5
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.

Judges 17:13
அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

Deuteronomy 12:3
அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.

Exodus 34:17
வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.


Tags அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான் அவள் வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டு பண்ண நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன் இப்பொழுதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்
நியாயாதிபதிகள் 17:3 Concordance நியாயாதிபதிகள் 17:3 Interlinear நியாயாதிபதிகள் 17:3 Image