Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மல்கியா 1:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மல்கியா மல்கியா 1 மல்கியா 1:7

மல்கியா 1:7
என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுதினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று, நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

Tamil Indian Revised Version
என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி முக்கியமல்ல என்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

Tamil Easy Reading Version
கர்த்தர், “நீங்கள் எனது பலிபீடத்திற்கு சுத்தமற்ற அப்பத்தைக் கொண்டு வருகிறீர்கள்” என்றார். ஆனால் நீங்கள், “அந்த அப்பத்தைச் சுத்தமற்றதாகச் செய்கிறது எது?” என்று கேட்கிறீர்கள். கர்த்தர், “நீங்கள் எனது மேஜைக்கு (பலிபீடம்) மரியாதை காட்டுவதில்லை.

திருவிவிலியம்
என் பலிபீடத்தின் மேல் தீட்டான உணவைப் படைத்து என்னை அவமதித்தீர்கள். நீங்களோ ‘எவ்வாறு நாங்கள் உம்மைக் களங்கப்படுத்தினோம்’ என்கிறீர்கள். ஆண்டவரின் பலிபீடத்தை அவமதிக்கலாம் என்றல்லவோ நினைக்கிறீர்கள்!

Malachi 1:6Malachi 1Malachi 1:8

King James Version (KJV)
Ye offer polluted bread upon mine altar; and ye say, Wherein have we polluted thee? In that ye say, The table of the LORD is contemptible.

American Standard Version (ASV)
Ye offer polluted bread upon mine altar. And ye say, Wherein have we polluted thee? In that ye say, The table of Jehovah is contemptible.

Bible in Basic English (BBE)
You put unclean bread on my altar. And you say, How have we made it unclean? By your saying, The table of the Lord is of no value.

Darby English Bible (DBY)
Ye offer polluted bread upon mine altar; and ye say, Wherein have we polluted thee? In that ye say, The table of Jehovah is contemptible.

World English Bible (WEB)
You offer polluted bread on my altar. You say, ‘How have we polluted you?’ In that you say, ‘Yahweh’s table contemptible.’

Young’s Literal Translation (YLT)
Ye are bringing nigh on Mine altar polluted bread, And ye have said: `In what have we polluted Thee?’ In your saying: `The table of Jehovah — it `is’ despicable,’

மல்கியா Malachi 1:7
என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுதினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று, நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
Ye offer polluted bread upon mine altar; and ye say, Wherein have we polluted thee? In that ye say, The table of the LORD is contemptible.

מַגִּישִׁ֤יםmaggîšîmma-ɡee-SHEEM
עַֽלʿalal
מִזְבְּחִי֙mizbĕḥiymeez-beh-HEE
לֶ֣חֶםleḥemLEH-hem
מְגֹאָ֔לmĕgōʾālmeh-ɡoh-AL
וַאֲמַרְתֶּ֖םwaʾămartemva-uh-mahr-TEM
בַּמֶּ֣הbammeba-MEH
גֵֽאַלְנ֑וּךָgēʾalnûkāɡay-al-NOO-ha
בֶּאֱמָרְכֶ֕םbeʾĕmorkembeh-ay-more-HEM
שֻׁלְחַ֥ןšulḥanshool-HAHN
יְהוָ֖הyĕhwâyeh-VA
נִבְזֶ֥הnibzeneev-ZEH
הֽוּא׃hûʾhoo

இணை வசனம்

Malachi 1:12
நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும் அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.

1 Corinthians 11:27
இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பாணம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.

1 Corinthians 10:21
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.

1 Corinthians 11:21
இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே.

Malachi 1:8
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.

Ezekiel 41:22
மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாயிருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும் அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது; அவர் என்னை நோக்கி: இது கர்த்தருடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.

1 Samuel 2:15
கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன்கையிலே வாங்குகிறதில்லை என்பான்.

Deuteronomy 15:21
அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்.

Leviticus 21:6
தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும்.

Leviticus 2:11
நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.


Tags என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுதினோம் என்கிறீர்கள் கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே
மல்கியா 1:7 Concordance மல்கியா 1:7 Interlinear மல்கியா 1:7 Image