சங்கீதம் 145:1
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.
Tamil Indian Revised Version
தாவீதின் நன்றிப்பாடல் ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன்.
Tamil Easy Reading Version
என் தேவனும் அரசருமாகிய உம்மைத் துதிக்கிறேன். உமது நாமத்தை நான் என்றென்றும் எப்போதும் போற்றுகிறேன்.
திருவிவிலியம்
⁽என் கடவுளே, என் அரசே!␢ உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;␢ உமது பெயரை என்றும்␢ எப்பொழுதும் போற்றுவேன்.⁾
Title
தாவீதின் ஜெபங்களுள் ஒன்று
Other Title
அரசராம் கடவுள் போற்றி!§(தாவீதின் திருப்பாடல்)
King James Version (KJV)
I will extol thee, my God, O king; and I will bless thy name for ever and ever.
American Standard Version (ASV)
I will extol thee, my God, O King; And I will bless thy name for ever and ever.
Bible in Basic English (BBE)
<A Song of praise. Of David.> Let me give glory to you, O God, my King; and blessing to your name for ever and ever.
Darby English Bible (DBY)
{A Psalm of praise. Of David.} I will extol thee, my God, O King, and I will bless thy name for ever and ever.
World English Bible (WEB)
> I will exalt you, my God, the King. I will praise your name forever and ever.
Young’s Literal Translation (YLT)
Praise by David. I exalt Thee, my God, O king, And bless Thy name to the age and for ever.
சங்கீதம் Psalm 145:1
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.
I will extol thee, my God, O king; and I will bless thy name for ever and ever.
| אֲרוֹמִמְךָ֣ | ʾărômimkā | uh-roh-meem-HA | |
| אֱלוֹהַ֣י | ʾĕlôhay | ay-loh-HAI | |
| הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וַאֲבָרֲכָ֥ה | waʾăbārăkâ | va-uh-va-ruh-HA | |
| שִׁ֝מְךָ֗ | šimkā | SHEEM-HA | |
| לְעוֹלָ֥ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| וָעֶֽד׃ | wāʿed | va-ED |
இணை வசனம்
Psalm 30:1
கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
Psalm 100:1
பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
Psalm 103:1
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
Psalm 113:1
அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
Psalm 145:21
என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.
Psalm 149:2
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.
Isaiah 33:22
கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.
Daniel 4:37
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.
Matthew 25:34
அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப்பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆசீர்வாதம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Revelation 19:16
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
Psalm 95:3
கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
Psalm 71:14
நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
Psalm 68:4
தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
Psalm 30:12
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
Psalm 34:1
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
Psalm 44:4
தேவனே, நீர் என் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
Psalm 45:1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
Psalm 45:6
தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
Psalm 47:6
தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
Psalm 48:2
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
Psalm 52:9
நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.
Malachi 1:14
தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Psalm 5:2
நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
Tags ராஜாவாகிய என் தேவனே உம்மை உயர்த்தி உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்
சங்கீதம் 145:1 Concordance சங்கீதம் 145:1 Interlinear சங்கீதம் 145:1 Image