சகரியா 11:16
இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும் இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், அதின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான்.
Tamil Indian Revised Version
இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பச்செய்வேன்; அவன் அழிக்கிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறிப்போனதைத் தேடாமலும், காயப்பட்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய பாதங்களை உடைத்துப்போடுவான்.
Tamil Easy Reading Version
இது நான் இந்த நாட்டுக்குப் புதிய மேய்ப்பனை ஏற்படுத்துவேன் என்பதைக் காட்டும். ஆனால் இந்த இளைஞனால் இழந்துப்போன ஆடுகளைப் பேணிக்காக்க இயலாது. அவனால் காயப்பட்ட ஆடுகளைக் குணப்படுத்தவும் முடியாது. அவனால் மெலிந்தவற்றுக்கு ஊட்ட முடியாது. அவன் கொழுத்தவற்றை முழுமையாக உண்பான். அவற்றின் குளம்புகள் மட்டுமே மீதியாகும்” என்றார்.
திருவிவிலியம்
ஏனெனில் இதோ நாட்டில் ஆயன் ஒருவனை எழுப்புவேன்; அவன் அழிந்து போவதைக் காப்பாற்றமாட்டான். சிதறிப் போவதைத் தேடித் திரியமாட்டான்; எலும்பு முறிந்ததைக் குணப்படுத்தமாட்டான்; நலமாயிருப்பதற்கு உணவு கொடுக்க மாட்டான்; ஆனால் கொழுத்ததின் இறைச்சியைத் தின்பான்; அவற்றின் குளம்புகளைக்கூட நறுக்கிப் போடுவான்.
King James Version (KJV)
For, lo, I will raise up a shepherd in the land, which shall not visit those that be cut off, neither shall seek the young one, nor heal that that is broken, nor feed that that standeth still: but he shall eat the flesh of the fat, and tear their claws in pieces.
American Standard Version (ASV)
For, lo, I will raise up a shepherd in the land, who will not visit those that are cut off, neither will seek those that are scattered, nor heal that which is broken, nor feed that which is sound; but he will eat the flesh of the fat `sheep’, and will tear their hoofs in pieces.
Bible in Basic English (BBE)
For see, I will put a sheep-keeper over the land, who will have no care for that which is cut off, and will not go in search of the wanderers, or make well what is broken, and he will not give food to that which is ill, but he will take for his food the flesh of the fat, and let their feet be broken.
Darby English Bible (DBY)
For behold, I will raise up a shepherd in the land, who shall not visit those that are about to perish, neither shall seek that which is strayed away, nor heal that which is wounded, nor feed that which is sound; but he will eat the flesh of the fat, and tear their hoofs in pieces.
World English Bible (WEB)
For, behold, I will raise up a shepherd in the land, who will not visit those who are cut off, neither will seek those who are scattered, nor heal that which is broken, nor feed that which is sound; but he will eat the flesh of the fat sheep, and will tear their hoofs in pieces.
Young’s Literal Translation (YLT)
For lo, I am raising up a shepherd in the land, The cut off he doth not inspect, The shaken off he doth not seek, And the broken he doth not heal, The standing he doth not sustain, And the flesh of the fat he doth eat, And their hoofs he doth break off.
சகரியா Zechariah 11:16
இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும் இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், அதின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான்.
For, lo, I will raise up a shepherd in the land, which shall not visit those that be cut off, neither shall seek the young one, nor heal that that is broken, nor feed that that standeth still: but he shall eat the flesh of the fat, and tear their claws in pieces.
| כִּ֣י | kî | kee | |
| הִנֵּֽה | hinnē | hee-NAY | |
| אָנֹכִי֩ | ʾānōkiy | ah-noh-HEE | |
| מֵקִ֨ים | mēqîm | may-KEEM | |
| רֹעֶ֜ה | rōʿe | roh-EH | |
| בָּאָ֗רֶץ | bāʾāreṣ | ba-AH-rets | |
| הַנִּכְחָד֤וֹת | hannikḥādôt | ha-neek-ha-DOTE | |
| לֹֽא | lōʾ | loh | |
| יִפְקֹד֙ | yipqōd | yeef-KODE | |
| הַנַּ֣עַר | hannaʿar | ha-NA-ar | |
| לֹֽא | lōʾ | loh | |
| יְבַקֵּ֔שׁ | yĕbaqqēš | yeh-va-KAYSH | |
| וְהַנִּשְׁבֶּ֖רֶת | wĕhannišberet | veh-ha-neesh-BEH-ret | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יְרַפֵּ֑א | yĕrappēʾ | yeh-ra-PAY | |
| הַנִּצָּבָה֙ | hanniṣṣābāh | ha-nee-tsa-VA | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יְכַלְכֵּ֔ל | yĕkalkēl | yeh-hahl-KALE | |
| וּבְשַׂ֤ר | ûbĕśar | oo-veh-SAHR | |
| הַבְּרִיאָה֙ | habbĕrîʾāh | ha-beh-ree-AH | |
| יֹאכַ֔ל | yōʾkal | yoh-HAHL | |
| וּפַרְסֵיהֶ֖ן | ûparsêhen | oo-fahr-say-HEN | |
| יְפָרֵֽק׃ | yĕpārēq | yeh-fa-RAKE |
இணை வசனம்
Ezekiel 34:2
மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்.
Jeremiah 23:2
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
John 10:12
மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
John 10:1
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
Luke 12:45
அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்,
Matthew 23:13
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
Matthew 23:2
வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
Ezekiel 34:21
நீங்கள் பலவீனமாயிருக்கிறவைகளையெல்லாம் புறம்பாக்கிச் சிதறப்பண்ணும்படி, அவைகளைப் பக்கத்திலும் முன்னந்தொடையினாலும் தள்ளி உங்கள் கொம்புகளைக்கொண்டு முட்டுகிறபடியிலே,
Ezekiel 34:16
நான் காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத் தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.
Ezekiel 34:10
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
Jeremiah 23:22
அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.
Isaiah 40:11
மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.
1 Samuel 17:34
தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற போது, ஒருவிசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.
Genesis 33:13
அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகளென்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.
Genesis 31:38
இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தைகளின் கடாக்களை நான் தின்னவில்லை.
Tags இதோ நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன் அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும் சிதறுண்டதைத் தேடாமலும் நொறுங்குண்டதைக் குணமாக்காமலும் இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும் அதின் மாம்சத்தைத் தின்று அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான்
சகரியா 11:16 Concordance சகரியா 11:16 Interlinear சகரியா 11:16 Image