Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தெசலோனிக்கேயர் 2:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 தெசலோனிக்கேயர் 1 தெசலோனிக்கேயர் 2 1 தெசலோனிக்கேயர் 2:17

1 தெசலோனிக்கேயர் 2:17
சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப்பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம்.

Tamil Indian Revised Version
சகோதரர்களே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே, உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம்.

Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே! கொஞ்ச காலமாக நாங்கள் உங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தோம். (அங்கே நாங்கள் உங்களோடு இல்லாவிட்டாலும் எங்கள் நினைவுகள் உங்களோடு இருந்தன.) உங்களைப் பார்க்க நாங்கள் மிகவும் விரும்பினோம். அதற்காக மிகவும் கடுமையாய் முயற்சி செய்தோம்.

திருவிவிலியம்
அன்பர்களே! நாங்கள் உள்ளத்தால் அல்ல, உடலால் மட்டுமே உங்களை விட்டுச் சிறிதுகாலம் பிரிந்து தவித்தோம். உங்கள் முகத்தைக் காண பேராவலோடு ஏங்கியிருந்தோம்.

Title
மீண்டும் அவர்களைப் பார்க்க விருப்பம்

Other Title
3. திருமுகம் எழுதப்பட்ட சூழ்நிலை⒣பவுல் மீண்டும் தெசலோனிக்கா செல்ல விரும்புதல்

1 Thessalonians 2:161 Thessalonians 21 Thessalonians 2:18

King James Version (KJV)
But we, brethren, being taken from you for a short time in presence, not in heart, endeavoured the more abundantly to see your face with great desire.

American Standard Version (ASV)
But we, brethren, being bereaved of you for a short season, in presence not in heart, endeavored the more exceedingly to see your face with great desire:

Bible in Basic English (BBE)
But we, my brothers, being away from you for a short time, in body but not in heart, had all the more desire to see your face;

Darby English Bible (DBY)
But we, brethren, having been bereaved of you and separated for a little moment in person, not in heart, have used more abundant diligence to see your face with much desire;

World English Bible (WEB)
But we, brothers, being bereaved of you for a short season, in presence, not in heart, tried even harder to see your face with great desire,

Young’s Literal Translation (YLT)
And we, brethren, having been taken from you for the space of an hour — in presence, not in heart — did hasten the more abundantly to see your face in much desire,

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 2:17
சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப்பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம்.
But we, brethren, being taken from you for a short time in presence, not in heart, endeavoured the more abundantly to see your face with great desire.

Ἡμεῖςhēmeisay-MEES
δέdethay
ἀδελφοίadelphoiah-thale-FOO
ἀπορφανισθέντεςaporphanisthentesah-pore-fa-nee-STHANE-tase
ἀφ'aphaf
ὑμῶνhymōnyoo-MONE
πρὸςprosprose
καιρὸνkaironkay-RONE
ὥραςhōrasOH-rahs
προσώπῳprosōpōprose-OH-poh
οὐouoo
καρδίᾳkardiakahr-THEE-ah
περισσοτέρωςperissoterōspay-rees-soh-TAY-rose
ἐσπουδάσαμενespoudasamenay-spoo-THA-sa-mane
τὸtotoh
πρόσωπονprosōponPROSE-oh-pone
ὑμῶνhymōnyoo-MONE
ἰδεῖνideinee-THEEN
ἐνenane
πολλῇpollēpole-LAY
ἐπιθυμίᾳepithymiaay-pee-thyoo-MEE-ah

இணை வசனம்

Colossians 2:5
சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.

1 Corinthians 5:3
நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,

1 Thessalonians 3:6
இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும் குறித்தும், நீங்கள் எப்பொழுதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்களென்பதைக்குறித்தும், எங்களுக்கு நற்செய்திசொன்னதினாலே,

Romans 1:13
சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்தது போல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வரப் பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.

1 Thessalonians 3:10
உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்கிறோமே.

Philippians 1:22
ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.

Romans 15:23
இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்கடளித்தில் வரும்படி அநேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

Acts 17:10
உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள்.

Luke 22:15
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.

Psalm 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

2 Kings 5:26
அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர் கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளைϠρம் வேலைக்காரΰையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?

2 Samuel 13:39
தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதலடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.

Genesis 48:11
இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும் இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள் செய்தார் என்றான்.

Genesis 45:28
அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.

Genesis 31:30
இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று கேட்டான்.


Tags சகோதரரே நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே உங்கள் முகத்தைப்பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம்
1 தெசலோனிக்கேயர் 2:17 Concordance 1 தெசலோனிக்கேயர் 2:17 Interlinear 1 தெசலோனிக்கேயர் 2:17 Image