2 நாளாகமம் 25:19
நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.
Tamil Indian Revised Version
நீ ஏதோமியர்களை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளச் செய்தது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடு யூதாவும் விழுவதற்காக, பொல்லாப்பை ஏன் தேடிக்கொள்ளவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.
Tamil Easy Reading Version
நீ உனக்குள்ளே, ‘நான் ஏதோமியரை வென்றிருக்கிறேன்’ என்று கூறுகிறாய். அதற்காக நீ பெருமைப்படுகிறாய். ஆனால் நீ உன் வீட்டிலேயே இரு. நீ துன்பத்தில் சிக்கிக்கொள்ள வேண்டிய தேவையில்லை. என்னிடம் போரிட வந்தால் நீயும், யூதாவும் அழிந்துப்போவீர்கள்” என்று சொல்லி அனுப்பினான்.
திருவிவிலியம்
ஏதோமை நீர் முறியடித்ததனால், உம் இதயம் தற்பெருமை கொண்டு எழுகிறது; இப்பொழுது நீர் உம் வீட்டிலேயே இரும்! நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி, தீமையை நீர் ஏன் தேடிக்கொள்ள வேண்டும்?” என்று பதிலளித்தான்.⒫
King James Version (KJV)
Thou sayest, Lo, thou hast smitten the Edomites; and thine heart lifteth thee up to boast: abide now at home; why shouldest thou meddle to thine hurt, that thou shouldest fall, even thou, and Judah with thee?
American Standard Version (ASV)
Thou sayest, Lo, thou hast smitten Edom; and thy heart lifteth thee up to boast: abide now at home; why shouldest thou meddle to `thy’ hurt, that thou shouldest fall, even thou, and Judah with thee?
Bible in Basic English (BBE)
You say, See, I have overcome Edom; and your heart is lifted up with pride: now keep in your country; why do you make causes of trouble, putting yourself, and Judah with you, in danger of downfall?
Darby English Bible (DBY)
Thou thinkest, Lo, thou hast smitten Edom; and thy heart has lifted thee up to boast: abide now at home; why shouldest thou contend with misfortune, that thou shouldest fall, thou and Judah with thee?
Webster’s Bible (WBT)
Thou sayest, Lo, thou hast smitten the Edomites; and thy heart lifteth thee up to boast: abide now at home; why shouldst thou meddle to thy hurt, that thou shouldst fall, even thou, and Judah with thee?
World English Bible (WEB)
You say, Behold, you have struck Edom; and your heart lifts you up to boast: abide now at home; why should you meddle to [your] hurt, that you should fall, even you, and Judah with you?
Young’s Literal Translation (YLT)
Thou hast said, Lo, I have smitten Edom; and thy heart hath lifted thee up to boast; now, abide in thy house, why dost thou stir thyself up in evil, that thou hast fallen, thou, and Judah with thee?’
2 நாளாகமம் 2 Chronicles 25:19
நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.
Thou sayest, Lo, thou hast smitten the Edomites; and thine heart lifteth thee up to boast: abide now at home; why shouldest thou meddle to thine hurt, that thou shouldest fall, even thou, and Judah with thee?
| אָמַ֗רְתָּ | ʾāmartā | ah-MAHR-ta | |
| הִנֵּ֤ה | hinnē | hee-NAY | |
| הִכִּ֙יתָ֙ | hikkîtā | hee-KEE-TA | |
| אֶת | ʾet | et | |
| אֱד֔וֹם | ʾĕdôm | ay-DOME | |
| וּנְשָֽׂאֲךָ֥ | ûnĕśāʾăkā | oo-neh-sa-uh-HA | |
| לִבְּךָ֖ | libbĕkā | lee-beh-HA | |
| לְהַכְבִּ֑יד | lĕhakbîd | leh-hahk-BEED | |
| עַתָּה֙ | ʿattāh | ah-TA | |
| שְׁבָ֣ה | šĕbâ | sheh-VA | |
| בְּבֵיתֶ֔ךָ | bĕbêtekā | beh-vay-TEH-ha | |
| לָ֤מָּה | lāmmâ | LA-ma | |
| תִתְגָּרֶה֙ | titgāreh | teet-ɡa-REH | |
| בְּרָעָ֔ה | bĕrāʿâ | beh-ra-AH | |
| וְנָ֣פַלְתָּ֔ | wĕnāpaltā | veh-NA-fahl-TA | |
| אַתָּ֖ה | ʾattâ | ah-TA | |
| וִֽיהוּדָ֥ה | wîhûdâ | vee-hoo-DA | |
| עִמָּֽךְ׃ | ʿimmāk | ee-MAHK |
இணை வசனம்
2 Chronicles 26:16
அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
2 Chronicles 32:25
எசேக்கியா தனக்காகச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.
1 Peter 5:5
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
James 4:6
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
1 Corinthians 1:29
மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
Luke 14:31
அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
Habakkuk 2:4
இதோ அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
Daniel 5:20
அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று.
Jeremiah 9:23
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
Proverbs 28:25
பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
Proverbs 26:17
வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.
Proverbs 20:3
வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
Proverbs 18:6
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.
Proverbs 16:18
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
Proverbs 13:10
அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
2 Chronicles 35:21
அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
Deuteronomy 8:14
உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,
Tags நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது இப்போதும் நீ உன் வீட்டிலே இரு நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்
2 நாளாகமம் 25:19 Concordance 2 நாளாகமம் 25:19 Interlinear 2 நாளாகமம் 25:19 Image