Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10 யாத்திராகமம் 10:7

யாத்திராகமம் 10:7
அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாய் இருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பார்வோனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: எதுவரைக்கும் இந்த மனிதன் நமக்குத் தொல்லை கொடுக்கிறவனாக இருப்பான்? தங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதர்களைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.

Tamil Easy Reading Version
அப்போது அதிகாரிகள் பார்வோனிடம், “இந்த ஜனங்களால் எத்தனை நாட்கள் நாம் இக்கட்டில் அகப்பட்டிருப்போம்? அவர்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ள அந்த ஜனங்களைப் போகவிடும். நீர் அவர்களைப் போகவிடாவிட்டால், நீர் அறிந்துகொள்ளும் முன்பு எகிப்து அழிக்கப்படும்!” என்று கூறினார்கள்.

திருவிவிலியம்
பார்வோனின் அலுவலர் அவனை நோக்கி, “எவ்வளவு காலம் இவன் நமக்குக் கண்ணியாக அமைவானோ? தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யும்படி அந்த மனிதர்களை நீர் அனுப்பிவிடும். எகிப்து அழிந்து கொண்டிருப்பது இன்னும் உமக்குத் தெரியவில்லையா?” என்றனர்.

Exodus 10:6Exodus 10Exodus 10:8

King James Version (KJV)
And Pharaoh’s servants said unto him, How long shall this man be a snare unto us? let the men go, that they may serve the LORD their God: knowest thou not yet that Egypt is destroyed?

American Standard Version (ASV)
And Pharaoh’s servants said unto him, How long shall this man be a snare unto us? let the men go, that they may serve Jehovah their God: knowest thou not yet that Egypt is destroyed?

Bible in Basic English (BBE)
And Pharaoh’s servants said to him, How long is this man to be the cause of evil to us? let the men go so that they may give worship to the Lord their God: are you not awake to Egypt’s danger?

Darby English Bible (DBY)
And Pharaoh’s bondmen said to him, How long shall this man be a snare to us? let the men go, that they may serve Jehovah their God: dost thou not yet know that Egypt is ruined?

Webster’s Bible (WBT)
And Pharaoh’s servants said to him, How long shall this man be a snare to us? Let the men go, that they may serve the LORD their God: knowest thou not yet that Egypt is destroyed?

World English Bible (WEB)
Pharaoh’s servants said to him, “How long will this man be a snare to us? Let the men go, that they may serve Yahweh, their God. Don’t you yet know that Egypt is destroyed?”

Young’s Literal Translation (YLT)
And the servants of Pharaoh say unto him, `Until when doth this `one’ become a snare to us? send the men away, and they serve Jehovah their God; knowest thou not yet that Egypt hath perished?’

யாத்திராகமம் Exodus 10:7
அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாய் இருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.
And Pharaoh's servants said unto him, How long shall this man be a snare unto us? let the men go, that they may serve the LORD their God: knowest thou not yet that Egypt is destroyed?

וַיֹּֽאמְרוּ֩wayyōʾmĕrûva-yoh-meh-ROO
עַבְדֵ֨יʿabdêav-DAY
פַרְעֹ֜הparʿōfahr-OH
אֵלָ֗יוʾēlāyway-LAV
עַדʿadad
מָתַי֙mātayma-TA
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
זֶ֥הzezeh
לָ֙נוּ֙lānûLA-NOO
לְמוֹקֵ֔שׁlĕmôqēšleh-moh-KAYSH
שַׁלַּח֙šallaḥsha-LAHK
אֶתʾetet
הָ֣אֲנָשִׁ֔יםhāʾănāšîmHA-uh-na-SHEEM
וְיַֽעַבְד֖וּwĕyaʿabdûveh-ya-av-DOO
אֶתʾetet
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹֽהֵיהֶ֑םʾĕlōhêhemay-loh-hay-HEM
הֲטֶ֣רֶםhăṭeremhuh-TEH-rem
תֵּדַ֔עtēdaʿtay-DA
כִּ֥יkee
אָֽבְדָ֖הʾābĕdâah-veh-DA
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

இணை வசனம்

Ecclesiastes 7:26
கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன், தேவனுக்குமுன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.

1 Samuel 18:21
அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.

Joshua 23:13
உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும் அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.

Exodus 23:33
அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.

1 Corinthians 7:35
இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.

Zephaniah 1:18
கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

Jeremiah 51:8
பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோயை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.

Jeremiah 48:4
மோவாப் நொறுங்குண்டது; அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது.

Isaiah 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

Isaiah 14:20
நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.

Proverbs 29:6
துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.

Psalm 107:34
குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.

Exodus 8:19
அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.


Tags அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாய் இருப்பான் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்ய அந்த மனிதரைப் போகவிடும் எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்
யாத்திராகமம் 10:7 Concordance யாத்திராகமம் 10:7 Interlinear யாத்திராகமம் 10:7 Image