யாத்திராகமம் 34:10
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை செய்கிறேன்; பூமியெங்கும் எந்த தேசங்களிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன்னுடைய மக்கள் எல்லோருக்கும் முன்பாகவும் செய்வேன்; உன்னோடு இருக்கிற மக்கள் எல்லோரும் கர்த்தருடைய செயல்களைக் காண்பார்கள்; உன்னோடு இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
அப்போது கர்த்தர், “உன் ஜனங்கள் எல்லாரோடும் இந்த உடன்படிக்கையைச் செய்கிறேன். பூமியிலுள்ள வேறேந்த ஜனத்துக்கும் செய்யாத வியக்கத்தக்க காரியங்களை நான் உங்களிடம் செய்வேன். உன்னோடு இருக்கிற ஜனங்கள் நான் மிக உன்னதமான கர்த்தர் என்பதைக் காண்பார்கள். நான் உனக்காகச் செய்யப்போகும் அற்புதங்களை ஜனங்கள் காண்பார்கள்.
திருவிவிலியம்
அப்பொழுது ஆண்டவர் கூறியது: “நான் ஓர் உடன்படிக்கை செய்கிறேன். எந்த நாட்டிலும் எந்த மக்களினத்திற்கும் செய்யாத அரும்பெரும் செயல்களை நான் உன் மக்கள் அனைவர் முன்னிலையிலும் செய்வேன். உன்னைச் சூழ்ந்துள்ள மக்களினத்தவர் அனைவரும் ஆண்டவரின் செயல்களைக் காண்பர். ஏனெனில், நான் உன்னோடிருந்து திகிலூட்டும் செயல்களைச் செய்வேன்.⒫
Other Title
உடன்படிக்கையைப் புதுப்பித்தல்§(விப 23:14-19; இச 7:1-5; 16:1-17)
King James Version (KJV)
And he said, Behold, I make a covenant: before all thy people I will do marvels, such as have not been done in all the earth, nor in any nation: and all the people among which thou art shall see the work of the LORD: for it is a terrible thing that I will do with thee.
American Standard Version (ASV)
And he said, Behold, I make a covenant: before all thy people I will do marvels, such as have not been wrought in all the earth, nor in any nation; and all the people among which thou art shall see the work of Jehovah; for it is a terrible thing that I do with thee.
Bible in Basic English (BBE)
And the Lord said, See, this is what I will undertake: before the eyes of your people I will do wonders, such as have not been done in all the earth or in any nation: and all your people will see the work of the Lord, for what I am about to do for you is greatly to be feared.
Darby English Bible (DBY)
And he said, Behold, I make a covenant: before all thy people I will do marvels that have not been done in all the earth, nor in any nation; and all the people in the midst of which thou [art] shall see the work of Jehovah; for a terrible thing it shall be that I will do with thee.
Webster’s Bible (WBT)
And he said, Behold, I make a covenant: before all thy people I will do wonders, such as have not been done in all the earth, nor in any nation: and all the people among which thou art, shall see the work of the LORD: for it is a terrible thing that I will do with thee.
World English Bible (WEB)
He said, “Behold, I make a covenant: before all your people I will do marvels, such as have not been worked in all the earth, nor in any nation; and all the people among which you are shall see the work of Yahweh; for it is an awesome thing that I do with you.
Young’s Literal Translation (YLT)
And He saith, `Lo, I am making a covenant: before all thy people I do wonders, which have not been done in all the earth, or in any nation, and all the people in whose midst thou `art’ have seen the work of Jehovah, for it `is’ fearful that which I am doing with thee.
யாத்திராகமம் Exodus 34:10
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
And he said, Behold, I make a covenant: before all thy people I will do marvels, such as have not been done in all the earth, nor in any nation: and all the people among which thou art shall see the work of the LORD: for it is a terrible thing that I will do with thee.
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הִנֵּ֣ה | hinnē | hee-NAY | |
| אָֽנֹכִי֮ | ʾānōkiy | ah-noh-HEE | |
| כֹּרֵ֣ת | kōrēt | koh-RATE | |
| בְּרִית֒ | bĕrît | beh-REET | |
| נֶ֤גֶד | neged | NEH-ɡed | |
| כָּֽל | kāl | kahl | |
| עַמְּךָ֙ | ʿammĕkā | ah-meh-HA | |
| אֶֽעֱשֶׂ֣ה | ʾeʿĕśe | eh-ay-SEH | |
| נִפְלָאֹ֔ת | niplāʾōt | neef-la-OTE | |
| אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER | |
| לֹֽא | lōʾ | loh | |
| נִבְרְא֥וּ | nibrĕʾû | neev-reh-OO | |
| בְכָל | bĕkāl | veh-HAHL | |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL | |
| הַגּוֹיִ֑ם | haggôyim | ha-ɡoh-YEEM | |
| וְרָאָ֣ה | wĕrāʾâ | veh-ra-AH | |
| כָל | kāl | hahl | |
| הָ֠עָם | hāʿom | HA-ome | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| אַתָּ֨ה | ʾattâ | ah-TA | |
| בְקִרְבּ֜וֹ | bĕqirbô | veh-keer-BOH | |
| אֶת | ʾet | et | |
| מַֽעֲשֵׂ֤ה | maʿăśē | ma-uh-SAY | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| כִּֽי | kî | kee | |
| נוֹרָ֣א | nôrāʾ | noh-RA | |
| ה֔וּא | hûʾ | hoo | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| אֲנִ֖י | ʾănî | uh-NEE | |
| עֹשֶׂ֥ה | ʿōśe | oh-SEH | |
| עִמָּֽךְ׃ | ʿimmāk | ee-MAHK |
இணை வசனம்
Isaiah 64:3
நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின.
Deuteronomy 5:2
நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.
Deuteronomy 10:21
அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே.
Joshua 6:20
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,
Joshua 10:12
கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.
2 Samuel 7:23
உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்து ஜாதிகளில் இந்த ஒரே ஜாதியை தேவன் தமக்கு ஜனமாக மீட்கிறதற்கும், தமக்குக் கீர்த்தி விளங்கப்பண்ணுகிறதற்கும் ஏற்பட்டாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டுவந்த உம்முடைய ஜனத்திற்குமுன்பாக பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த ஜாதிகளுக்கும், அவர்கள் தேவர்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து,
Psalm 77:14
அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே, ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்.
Psalm 78:12
அவர்களுடைய பிதாக்களுக்குமுன்பாக, எகிப்துதேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
Jeremiah 32:21
இஸ்ரவேலாகிய உமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி,
Psalm 147:20
அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.
Psalm 145:6
ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
Psalm 106:22
தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
Psalm 76:12
பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
Exodus 34:27
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.
Deuteronomy 4:13
நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக்கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
Deuteronomy 4:32
தேவன் மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்த நாள்முதல் உனக்கு முன் இருந்த பூர்வநாட்களில், வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ:
Deuteronomy 29:12
உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும்,
Deuteronomy 32:30
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?
Psalm 65:5
பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர்.
Psalm 66:3
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.
Psalm 66:5
தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
Psalm 68:35
தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Exodus 24:7
உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.
Tags அதற்கு அவர் இதோ நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன் பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன் உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள் உன்னோடேகூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்
யாத்திராகமம் 34:10 Concordance யாத்திராகமம் 34:10 Interlinear யாத்திராகமம் 34:10 Image