எசேக்கியேல் 22:14
நான் உன்னில் நியாயஞ்செய்யும் நாட்களில் உன் இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.
Tamil Indian Revised Version
நான் உன்னில் நியாயம்செய்யும் நாட்களில் உன்னுடைய இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன்னுடைய கைகள் திடமாக இருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.
Tamil Easy Reading Version
பிறகு தைரியமாக இருப்பாயா? நான் உன்னைத் தண்டிக்க வரும் காலத்தில் நீ பலமுடையவனாக இருப்பாயா? இல்லை! நானே கர்த்தர், நான் பேசியிருக்கிறேன்! நான் சொன்னவற்றைச் செய்வேன்.
திருவிவிலியம்
நான் உன்னைத் தண்டிக்கும் நாளில் உன் மனவுறுதி நிலைத்திருக்குமா? அல்லது உன் கைகள் வலிமையுடன் விளங்கிடுமா? ஆண்டவராகிய நானே இதைச் சொல்கிறேன். நான் இதைச் செய்தே தீர்வேன்.
King James Version (KJV)
Can thine heart endure, or can thine hands be strong, in the days that I shall deal with thee? I the LORD have spoken it, and will do it.
American Standard Version (ASV)
Can thy heart endure, or can thy hands be strong, in the days that I shall deal with thee? I, Jehovah, have spoken it, and will do it.
Bible in Basic English (BBE)
Will your heart be high or your hands strong in the days when I take you in hand? I the Lord have said it and will do it.
Darby English Bible (DBY)
Shall thy heart endure, shall thy hands be strong, in the days that I shall deal with thee? I Jehovah have spoken, and will do [it].
World English Bible (WEB)
Can your heart endure, or can your hands be strong, in the days that I shall deal with you? I, Yahweh, have spoken it, and will do it.
Young’s Literal Translation (YLT)
Doth thy heart stand — are thy hands strong, For the days that I am dealing with thee? I, Jehovah, have spoken and have done `it’.
எசேக்கியேல் Ezekiel 22:14
நான் உன்னில் நியாயஞ்செய்யும் நாட்களில் உன் இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.
Can thine heart endure, or can thine hands be strong, in the days that I shall deal with thee? I the LORD have spoken it, and will do it.
| הֲיַעֲמֹ֤ד | hăyaʿămōd | huh-ya-uh-MODE | |
| לִבֵּךְ֙ | libbēk | lee-bake | |
| אִם | ʾim | eem | |
| תֶּחֱזַ֣קְנָה | teḥĕzaqnâ | teh-hay-ZAHK-na | |
| יָדַ֔יִךְ | yādayik | ya-DA-yeek | |
| לַיָּמִ֕ים | layyāmîm | la-ya-MEEM | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| אֲנִ֖י | ʾănî | uh-NEE | |
| עֹשֶׂ֣ה | ʿōśe | oh-SEH | |
| אוֹתָ֑ךְ | ʾôtāk | oh-TAHK | |
| אֲנִ֥י | ʾănî | uh-NEE | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| דִּבַּ֥רְתִּי | dibbartî | dee-BAHR-tee | |
| וְעָשִֽׂיתִי׃ | wĕʿāśîtî | veh-ah-SEE-tee |
இணை வசனம்
Ezekiel 21:7
நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால் இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
Ezekiel 17:24
அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்தவிருட்சத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தாரென்று சொல் என்றார்.
Ezekiel 24:14
கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை; உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Hebrews 10:31
ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே.
1 Corinthians 10:22
நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?
Mark 13:31
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
Ezekiel 28:9
உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே,
Jeremiah 13:21
அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?
Isaiah 45:9
மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகளில்லையென்று சொல்லலாமோ?
Isaiah 31:3
எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.
Job 40:9
தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய் சத்தமிடக்கூடுமோ?
1 Samuel 15:29
இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.
Ezekiel 5:13
இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களில் நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள்.
Tags நான் உன்னில் நியாயஞ்செய்யும் நாட்களில் உன் இருதயம் தாங்குமோ அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் இதை நிறைவேற்றுவேன்
எசேக்கியேல் 22:14 Concordance எசேக்கியேல் 22:14 Interlinear எசேக்கியேல் 22:14 Image