Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 7:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 7 எசேக்கியேல் 7:11

எசேக்கியேல் 7:11
அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.

Tamil Indian Revised Version
அக்கிரமமானது கொடுமையின்கோலாக எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கூட்டத்திலும் அவர்களுடைய அழிவிலும் ஒன்றும் மீதியாக இருப்பதில்லை; அவர்களுக்காக புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.

Tamil Easy Reading Version
மூர்க்கத்தனமான மனிதன் கெட்ட ஜனங்களைத் தண்டிக்கத் தயாராகி இருக்கிறான். இஸ்ரவேலில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவன் அவர்களில் ஒருவன் அல்ல. அந்தக் கூட்டத்தில் ஒருவனாக அவன் இல்லை. அவன் அந்த ஜனங்களில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவன் அல்ல.

திருவிவிலியம்
⁽வன்முறை, கொடுமையின்␢ கோலாக வளர்ந்துள்ளது;␢ அவர்களோ அவர்களது செழிப்போ␢ அவர்களது செல்வமோ,␢ எதுவுமே தப்ப முடியாது.␢ அவர்களுக்குள் யாருமே␢ மேன்மையுடன் திகழ முடியாது.⁾

Ezekiel 7:10Ezekiel 7Ezekiel 7:12

King James Version (KJV)
Violence is risen up into a rod of wickedness: none of them shall remain, nor of their multitude, nor of any of their’s: neither shall there be wailing for them.

American Standard Version (ASV)
Violence is risen up into a rod of wickedness; none of them `shall remain’, nor of their multitude, nor of their wealth: neither shall there be eminency among them.

Bible in Basic English (BBE)
Violent behaviour has been lifted up into a rod of evil; it will not be slow in coming, it will not keep back.

Darby English Bible (DBY)
Violence is risen up into a rod of wickedness: nothing of them [shall remain], nor of their multitude, nor of their wealth, nor of the magnificence in the midst of them.

World English Bible (WEB)
Violence is risen up into a rod of wickedness; none of them [shall remain], nor of their multitude, nor of their wealth: neither shall there be eminency among them.

Young’s Literal Translation (YLT)
The violence hath risen to a rod of wickedness, There is none of them, nor of their multitude, Nor of their noise, nor is there wailing for them.

எசேக்கியேல் Ezekiel 7:11
அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.
Violence is risen up into a rod of wickedness: none of them shall remain, nor of their multitude, nor of any of their's: neither shall there be wailing for them.

הֶחָמָ֥ס׀heḥāmāsheh-ha-MAHS
קָ֖םqāmkahm
לְמַטֵּהlĕmaṭṭēleh-ma-TAY
רֶ֑שַׁעrešaʿREH-sha
לֹאlōʾloh
מֵהֶ֞םmēhemmay-HEM
וְלֹ֧אwĕlōʾveh-LOH
מֵהֲמוֹנָ֛םmēhămônāmmay-huh-moh-NAHM
וְלֹ֥אwĕlōʾveh-LOH
מֶהֱמֵהֶ֖םmehĕmēhemmeh-hay-may-HEM
וְלֹאwĕlōʾveh-LOH
נֹ֥הַּnōahNOH-ah
בָּהֶֽם׃bāhemba-HEM

இணை வசனம்

Zephaniah 1:18
கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

Ezekiel 7:23
ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.

Isaiah 59:6
அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.

Ezekiel 24:16
மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.

Amos 3:10
அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Amos 6:3
தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து,

Micah 2:2
வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும் மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ!

Micah 3:3
என் ஜனத்தின் சதையைத்தின்று அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு அவர்கள் எலும்புகளை முறித்து பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள்.

Micah 6:12
அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்: அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது.

James 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

Ezekiel 7:16
அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன் தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.

Ezekiel 7:2
மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.

Ezekiel 6:11
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் கையில் அடித்து, உன் காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய சகல பொல்லாத அருவருப்புகளினிமித்தமும் ஐயோ! என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள்.

Isaiah 5:7
சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.

Isaiah 9:4
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும் அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.

Isaiah 14:29
முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.

Jeremiah 6:7
ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.

Jeremiah 16:5
ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும், அவர்களுக்குப் பரிதபிக்காமலுமிருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 22:18
ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

Jeremiah 25:33
அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.

Ezekiel 5:4
பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பாயாக; அதிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் விரோதமாக அக்கினி புறப்படும்.

Ezekiel 5:11
ஆதலால், சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகப்பண்ணுவேன், நான் இரங்கமாட்டேன், இதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

Psalm 78:64
அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.


Tags அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை
எசேக்கியேல் 7:11 Concordance எசேக்கியேல் 7:11 Interlinear எசேக்கியேல் 7:11 Image