ஆதியாகமம் 31:19
லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடிக்கொண்டாள்.
Tamil Indian Revised Version
லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்த சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய வீட்டிலிருந்த சிலைகளைத் திருடிக்கொண்டாள்.
Tamil Easy Reading Version
அந்த நேரத்தில் லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கப் போயிருந்தான். ராகேல் வீட்டிற்குள் போய் தந்தையினுடைய பொய்த் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டாள்.
திருவிவிலியம்
லாபான் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கப் போயிருந்தபொழுது, ராகேல் தம் தந்தையின் குலதெய்வச் சிலைகளைத் திருடிக் கொண்டுவிட்டார்.
King James Version (KJV)
And Laban went to shear his sheep: and Rachel had stolen the images that were her father’s.
American Standard Version (ASV)
Now Laban was gone to shear his sheep: and Rachel stole the teraphim that were her father’s.
Bible in Basic English (BBE)
Now Laban had gone to see to the cutting of the wool of his sheep; so Rachel secretly took the images of the gods of her father’s house.
Darby English Bible (DBY)
And Laban had gone to shear his sheep. And Rachel stole the teraphim that [belonged] to her father.
Webster’s Bible (WBT)
And Laban went to shear his sheep; and Rachel had stolen the images that were her father’s.
World English Bible (WEB)
Now Laban had gone to shear his sheep: and Rachel stole the teraphim{teraphim were household idols that may have been associated with inheritance rights to the household property.} that were her father’s.
Young’s Literal Translation (YLT)
And Laban hath gone to shear his flock, and Rachel stealeth the teraphim which her father hath;
ஆதியாகமம் Genesis 31:19
லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடிக்கொண்டாள்.
And Laban went to shear his sheep: and Rachel had stolen the images that were her father's.
| וְלָבָ֣ן | wĕlābān | veh-la-VAHN | |
| הָלַ֔ךְ | hālak | ha-LAHK | |
| לִגְזֹ֖ז | ligzōz | leeɡ-ZOZE | |
| אֶת | ʾet | et | |
| צֹאנ֑וֹ | ṣōʾnô | tsoh-NOH | |
| וַתִּגְנֹ֣ב | wattignōb | va-teeɡ-NOVE | |
| רָחֵ֔ל | rāḥēl | ra-HALE | |
| אֶת | ʾet | et | |
| הַתְּרָפִ֖ים | hattĕrāpîm | ha-teh-ra-FEEM | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| לְאָבִֽיהָ׃ | lĕʾābîhā | leh-ah-VEE-ha |
இணை வசனம்
Hosea 3:4
இஸ்ரவேல் புத்திரர் அநேகநாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.
1 Samuel 19:13
மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள்.
Genesis 31:30
இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று கேட்டான்.
Genesis 35:2
அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.
Ezekiel 21:21
பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே நிமித்தம் பார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, விக்கிரகங்களை உசாவி, ஈரலால் குறிபார்ப்பான்.
Genesis 31:34
ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள், லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.
Genesis 31:32
ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.
Judges 18:31
தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.
Judges 18:14
அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.
Judges 17:4
அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.
Joshua 24:2
அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன் நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.
Tags லாபான் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான் அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடிக்கொண்டாள்
ஆதியாகமம் 31:19 Concordance ஆதியாகமம் 31:19 Interlinear ஆதியாகமம் 31:19 Image