Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 47:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 47 ஆதியாகமம் 47:29

ஆதியாகமம் 47:29
இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மரணமடையும் காலம் நெருங்கியது. அப்பொழுது அவன் தன் மகனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து எனக்கு நம்பிக்கையும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம் செய்யாதிருப்பாயாக.

Tamil Easy Reading Version
தான் விரைவில் மரித்துப் போவேன் என்று இஸ்ரவேலுக்குத் (யாக்கோபு) தெரிந்தது. அவன் யோசேப்பை அழைத்து அவனிடம்: “நீ என்னை நேசித்தால், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து ஒரு வாக்குறுதியைச் செய். நான் சொல்வதை நீ செய்யவேண்டும். எனக்கு உண்மையாக இருக்கவேண்டும். நான் மரித்தால் என்னை எகிப்தில் அடக்கம் செய்யவேண்டாம்.

திருவிவிலியம்
அவர் தாம் இறக்கும் நாள் நெருங்கி வருவதைக் கண்டு, தம் மகன் யோசேப்பை வரவழைத்து, அவரை நோக்கி, “உன் பார்வையில் எனக்குத் தயை கிடைக்குமானால், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, எனக்குக் கனிவும் பற்றும் காட்டுவதாக வாக்களி. என்னை எகிப்து நாட்டில் அடக்கம் செய்யாதே.

Genesis 47:28Genesis 47Genesis 47:30

King James Version (KJV)
And the time drew nigh that Israel must die: and he called his son Joseph, and said unto him, If now I have found grace in thy sight, put, I pray thee, thy hand under my thigh, and deal kindly and truly with me; bury me not, I pray thee, in Egypt:

American Standard Version (ASV)
And the time drew near that Israel must die: and he called his son Joseph, and said unto him, If now I have found favor in thy sight, put, I pray thee, thy hand under my thigh, and deal kindly and truly with me: bury me not, I pray thee, in Egypt;

Bible in Basic English (BBE)
And the time of his death came near, and he sent for his son Joseph and said to him, If now I am dear to you, put your hand under my leg and take an oath that you will not put me to rest in Egypt;

Darby English Bible (DBY)
And the days of Israel approached that he should die. And he called his son Joseph, and said to him, If now I have found favour in thine eyes, put, I pray thee, thy hand under my thigh, and deal kindly and truly with me: bury me not, I pray thee, in Egypt;

Webster’s Bible (WBT)
And the time drew nigh that Israel must die: and he called his son Joseph, and said to him, If now I have found grace in thy sight, put, I pray thee, thy hand under my thigh, and deal kindly and truly with me; bury me not, I pray thee, in Egypt:

World English Bible (WEB)
The time drew near that Israel must die, and he called his son Joseph, and said to him, “If now I have found favor in your sight, please put your hand under my thigh, and deal kindly and truly with me. Please don’t bury me in Egypt,

Young’s Literal Translation (YLT)
And the days of Israel are near to die, and he calleth for his son, for Joseph, and saith to him, `If, I pray thee, I have found grace in thine eyes, put, I pray thee, thy hand under my thigh, and thou hast done with me kindness and truth; bury me not, I pray thee, in Egypt,

ஆதியாகமம் Genesis 47:29
இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக.
And the time drew nigh that Israel must die: and he called his son Joseph, and said unto him, If now I have found grace in thy sight, put, I pray thee, thy hand under my thigh, and deal kindly and truly with me; bury me not, I pray thee, in Egypt:

וַיִּקְרְב֣וּwayyiqrĕbûva-yeek-reh-VOO
יְמֵֽיyĕmêyeh-MAY
יִשְׂרָאֵל֮yiśrāʾēlyees-ra-ALE
לָמוּת֒lāmûtla-MOOT
וַיִּקְרָ֣א׀wayyiqrāʾva-yeek-RA
לִבְנ֣וֹlibnôleev-NOH
לְיוֹסֵ֗ףlĕyôsēpleh-yoh-SAFE
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
לוֹ֙loh
אִםʾimeem
נָ֨אnāʾna
מָצָ֤אתִיmāṣāʾtîma-TSA-tee
חֵן֙ḥēnhane
בְּעֵינֶ֔יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
שִֽׂיםśîmseem
נָ֥אnāʾna
יָֽדְךָ֖yādĕkāya-deh-HA
תַּ֣חַתtaḥatTA-haht
יְרֵכִ֑יyĕrēkîyeh-ray-HEE
וְעָשִׂ֤יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
עִמָּדִי֙ʿimmādiyee-ma-DEE
חֶ֣סֶדḥesedHEH-sed
וֶֽאֱמֶ֔תweʾĕmetveh-ay-MET
אַלʾalal
נָ֥אnāʾna
תִקְבְּרֵ֖נִיtiqbĕrēnîteek-beh-RAY-nee
בְּמִצְרָֽיִם׃bĕmiṣrāyimbeh-meets-RA-yeem

இணை வசனம்

Deuteronomy 31:14
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளைகொடுக்கும்படி, அவனை அழைத்துக்கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.

Genesis 24:49
இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலது புறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான்.

Genesis 24:2
அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:

1 Kings 2:1
தாவீது மரணமடையும் காலம் சமீபத்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:

Genesis 50:24
யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப் பண்ணுவார் என்று சொன்னதுமன்றி;

Hebrews 11:22
விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.

Hebrews 9:27
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

Acts 7:15
அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப்போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,

Psalm 89:48
மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)

Psalm 49:9
அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.

Psalm 49:7
ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,

Psalm 6:5
மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை. பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?

Job 30:23
சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.

Job 14:14
மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.

Job 7:1
பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?

2 Samuel 14:14
நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச்சேர்க்கக் கூடாதபடிக்கு, தரையிலே சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்துண்டவன் முற்றிலும் தம்மைவிட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்.

2 Samuel 7:12
உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.

Genesis 47:9
அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.

Genesis 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.


Tags இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து அவனை நோக்கி என்மேல் உனக்குத் தயவுண்டானால் உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக
ஆதியாகமம் 47:29 Concordance ஆதியாகமம் 47:29 Interlinear ஆதியாகமம் 47:29 Image