ஆபகூக் 3:13
உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.
Tamil Indian Revised Version
உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா)
Tamil Easy Reading Version
நீர் உமது ஜனங்களைக் காப்பாற்ற வந்தீர். நீர் தேர்ந்தெடுத்த அரசனை வெற்றி நோக்கி நடத்த வந்தீர். ஒவ்வொரு தீமை செய்கிற குடும்பத்திலும் உள்ள தலைவர்களை, முக்கியமானவர்களானாலும் முக்கியமற்றவர்களானாலும் அவர்களைக் கொன்றீர்.
திருவிவிலியம்
⁽உம் மக்களை மீட்கவும்,␢ நீர் திருப்பொழிவு செய்தவரை␢ விடுவிக்கவுமே நீர் புறப்படுகின்றீர்.␢ பொல்லாதவனின் குடும்பத் தலைவனை␢ வெட்டி வீழ்த்துகின்றீர்.␢ அவனைப் பின்பற்றுவோரை␢ முற்றிலும் அழித்து விடுகின்றீர். (சேலா)⁾
King James Version (KJV)
Thou wentest forth for the salvation of thy people, even for salvation with thine anointed; thou woundedst the head out of the house of the wicked, by discovering the foundation unto the neck. Selah.
American Standard Version (ASV)
Thou wentest forth for the salvation of thy people, For the salvation of thine anointed; Thou woundest the head out of the house of the wicked man, Laying bare the foundation even unto the neck. Selah.
Bible in Basic English (BBE)
You went out for the salvation of your people, for the salvation of the one on whom your holy oil was put; wounding the head of the family of the evil-doer, uncovering the base even to the neck. Selah.
Darby English Bible (DBY)
Thou wentest forth for the salvation of thy people, For the salvation of thine anointed; Thou didst smite off the head from the house of the wicked, Laying bare the foundation even to the neck. Selah.
World English Bible (WEB)
You went forth for the salvation of your people, For the salvation of your anointed. You crushed the head of the land of wickedness. You stripped them head to foot. Selah.
Young’s Literal Translation (YLT)
Thou hast gone forth for the salvation of Thy people, For salvation with Thine anointed, Thou hast smitten the head of the house of the wicked, Laying bare the foundation unto the neck. Pause!
ஆபகூக் Habakkuk 3:13
உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.
Thou wentest forth for the salvation of thy people, even for salvation with thine anointed; thou woundedst the head out of the house of the wicked, by discovering the foundation unto the neck. Selah.
| יָצָ֙אתָ֙ | yāṣāʾtā | ya-TSA-TA | |
| לְיֵ֣שַׁע | lĕyēšaʿ | leh-YAY-sha | |
| עַמֶּ֔ךָ | ʿammekā | ah-MEH-ha | |
| לְיֵ֖שַׁע | lĕyēšaʿ | leh-YAY-sha | |
| אֶת | ʾet | et | |
| מְשִׁיחֶ֑ךָ | mĕšîḥekā | meh-shee-HEH-ha | |
| מָחַ֤צְתָּ | māḥaṣtā | ma-HAHTS-ta | |
| רֹּאשׁ֙ | rōš | rohsh | |
| מִבֵּ֣ית | mibbêt | mee-BATE | |
| רָשָׁ֔ע | rāšāʿ | ra-SHA | |
| עָר֛וֹת | ʿārôt | ah-ROTE | |
| יְס֥וֹד | yĕsôd | yeh-SODE | |
| עַד | ʿad | ad | |
| צַוָּ֖אר | ṣawwār | tsa-WAHR | |
| סֶֽלָה׃ | selâ | SEH-la |
இணை வசனம்
Psalm 110:6
அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; விஸ்தாரமான தேசங்களின்மேல் தலைவர்களாகிறவர்களை நொறுக்கிப்போடுவார்.
Psalm 105:15
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய ராஜாக்களுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
Psalm 68:19
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
Psalm 74:13
தேவரீர் உமது வல்லமையினால், சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.
Psalm 77:20
மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.
Psalm 89:19
அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
Psalm 99:6
அவருடைய ஆசாரியரில் மோசேயும், ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார்.
Psalm 105:26
தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
Isaiah 63:11
ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறிவரப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?
Psalm 68:7
தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)
Psalm 28:8
கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
Psalm 20:6
கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.
Exodus 14:13
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
Exodus 15:1
அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
Joshua 10:11
அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
Joshua 10:24
அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
Joshua 10:42
அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
Joshua 11:8
கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன்மட்டும் மிஸ்ரபோத்மாயீமட்டும், கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.
Joshua 11:12
அந்த ராஜாக்களுடைய எல்லாப்பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயக்கருக்கினால் வெட்டி, கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களைச் சங்காரம்பண்ணினான்.
Psalm 18:37
என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.
Exodus 12:29
நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
Tags உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர் கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர் சேலா
ஆபகூக் 3:13 Concordance ஆபகூக் 3:13 Interlinear ஆபகூக் 3:13 Image