Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 42:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 42 ஏசாயா 42:15

ஏசாயா 42:15
நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திரட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள தாவரங்களையெல்லாம் வாடச்செய்து, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகச்செய்வேன்.

Tamil Easy Reading Version
நான் மலைகளையும் குன்றுகளையும் அழிப்பேன். நான் அங்கே வளருகின்ற தாவரங்களை வாடச் செய்வேன். நான் ஆறுகளை வறண்ட நிலமாக்குவேன். நான் தண்ணீருள்ள குளங்களையும் வறளச் செய்வேன்.

திருவிவிலியம்
⁽மலைகளையும் குன்றுகளையும்␢ பாழாக்குவேன்;␢ அவற்றின் புல்பூண்டுகளை␢ உலர்ந்து போகச் செய்வேன்;␢ ஆறுகளைத் திட்டுகளாக மாற்றுவேன்;␢ ஏரிகளை வற்றிப்போகச் செய்வேன்.⁾

Isaiah 42:14Isaiah 42Isaiah 42:16

King James Version (KJV)
I will make waste mountains and hills, and dry up all their herbs; and I will make the rivers islands, and I will dry up the pools.

American Standard Version (ASV)
I will lay waste mountains and hills, and dry up all their herbs; and I will make the rivers islands, and will dry up the pools.

Bible in Basic English (BBE)
I will make waste mountains and hills, drying up all their plants; and I will make rivers dry, and pools dry land.

Darby English Bible (DBY)
I will lay waste mountains and hills, and dry up all their herbs; and I will make the rivers islands, and I will dry up the pools.

World English Bible (WEB)
I will lay waste mountains and hills, and dry up all their herbs; and I will make the rivers islands, and will dry up the pools.

Young’s Literal Translation (YLT)
I make waste mountains and hills, And all their herbs I dry up, And I have made rivers become isles, And ponds I dry up.

ஏசாயா Isaiah 42:15
நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திரட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன்.
I will make waste mountains and hills, and dry up all their herbs; and I will make the rivers islands, and I will dry up the pools.

אַחֲרִ֤יבʾaḥărîbah-huh-REEV
הָרִים֙hārîmha-REEM
וּגְבָע֔וֹתûgĕbāʿôtoo-ɡeh-va-OTE
וְכָלwĕkālveh-HAHL
עֶשְׂבָּ֖םʿeśbāmes-BAHM
אוֹבִ֑ישׁʾôbîšoh-VEESH
וְשַׂמְתִּ֤יwĕśamtîveh-sahm-TEE
נְהָרוֹת֙nĕhārôtneh-ha-ROTE
לָֽאִיִּ֔יםlāʾiyyîmla-ee-YEEM
וַאֲגַמִּ֖יםwaʾăgammîmva-uh-ɡa-MEEM
אוֹבִֽישׁ׃ʾôbîšoh-VEESH

இணை வசனம்

Isaiah 50:2
நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக் கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.

Nahum 1:4
அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார். பாசனும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.

Isaiah 44:27
நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்.

Isaiah 2:12
எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,

Revelation 8:7
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

Revelation 11:13
அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

Revelation 16:12
ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.

Revelation 16:18
சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.

Revelation 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

Revelation 6:12
அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.

Zechariah 10:11
இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கையில் அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோம்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும்.

Psalm 107:33
அவர் ஆறுகளை அவாந்தர வெளியாகவும் நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,

Psalm 114:3
கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

Isaiah 11:15
எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழாறுகளாகப் பிரித்து, ஜனங்கள் கால்நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார்.

Isaiah 49:11
என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும்.

Jeremiah 4:24
பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.

Ezekiel 38:20
என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலிலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

Habakkuk 3:6
அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.

Haggai 2:6
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.

Psalm 18:7
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.


Tags நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி ஆறுகளைத் திரட்டுகளாக்கி ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன்
ஏசாயா 42:15 Concordance ஏசாயா 42:15 Interlinear ஏசாயா 42:15 Image