Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 57:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 57 ஏசாயா 57:6

ஏசாயா 57:6
பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ?

Tamil Indian Revised Version
பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை ஊற்றி, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ?

Tamil Easy Reading Version
ஆறுகளில் உள்ள வழு வழுப்பான கற்களை நீங்கள் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். அவற்றைத் தொழுதுகொள்ள அவற்றின் மீது திராட்சைரசத்தை ஊற்றுகிறீர்கள். அவற்றிற்கு நீங்கள் பலி கொடுக்கிறீர்கள். ஆனால், அந்தப் பாறைகளே நீ பெற்றுக்கொள்ளும் எல்லாம் ஆகும். இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தும் என்று நினைக்கிறாயா? இல்லை. இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தாது.

திருவிவிலியம்
⁽பள்ளத்தாக்கின் வழவழப்பான␢ கற்களினின்று உருவான சிலைகளே␢ உன் பங்கு; ஆம், அவையே உன் பங்கு;␢ அவற்றிற்கு நீ நீர்மப்பலியை␢ ஊற்றியுள்ளாய்;␢ உணவுப் படையலைப் படைத்துள்ளாய்;␢ இவற்றால் நான் அமைதி அடைவேனோ?⁾

Isaiah 57:5Isaiah 57Isaiah 57:7

King James Version (KJV)
Among the smooth stones of the stream is thy portion; they, they are thy lot: even to them hast thou poured a drink offering, thou hast offered a meat offering. Should I receive comfort in these?

American Standard Version (ASV)
Among the smooth `stones’ of the valley is thy portion; they, they are thy lot; even to them hast thou poured a drink-offering, thou hast offered an oblation. Shall I be appeased for these things?

Bible in Basic English (BBE)
Among the smooth stones of the valley is your heritage; they, even they, are your part: even to them have you made a drink offering and a meal offering. Is it possible for such things to be overlooked by me?

Darby English Bible (DBY)
Among the smooth [stones] of the torrent is thy portion; they, they are thy lot: even to them hast thou poured out a drink-offering, thou hast offered an oblation. Shall I be comforted myself as to these things?

World English Bible (WEB)
Among the smooth [stones] of the valley is your portion; they, they are your lot; even to them have you poured a drink-offering, you have offered an offering. Shall I be appeased for these things?

Young’s Literal Translation (YLT)
Among the smooth things of a brook `is’ thy portion, They — they `are’ thy lot, Also to them thou hast poured out an oblation, Thou hast caused a present to ascend, For these things am I comforted?

ஏசாயா Isaiah 57:6
பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ?
Among the smooth stones of the stream is thy portion; they, they are thy lot: even to them hast thou poured a drink offering, thou hast offered a meat offering. Should I receive comfort in these?

בְּחַלְּקֵיbĕḥallĕqêbeh-ha-leh-KAY
נַ֣חַלnaḥalNA-hahl
חֶלְקֵ֔ךְḥelqēkhel-KAKE
הֵ֥םhēmhame
הֵ֖םhēmhame
גּוֹרָלֵ֑ךְgôrālēkɡoh-ra-LAKE
גַּםgamɡahm
לָהֶ֞םlāhemla-HEM
שָׁפַ֥כְתְּšāpakĕtsha-FA-het
נֶ֙סֶךְ֙nesekNEH-sek
הֶעֱלִ֣יתheʿĕlîtheh-ay-LEET
מִנְחָ֔הminḥâmeen-HA
הַ֥עַלhaʿalHA-al
אֵ֖לֶּהʾēlleA-leh
אֶנָּחֵֽם׃ʾennāḥēmeh-na-HAME

இணை வசனம்

Jeremiah 3:9
பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

Jeremiah 7:18
எனக்கு மனமடிவுண்டாக அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகுபொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்புமூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.

Habakkuk 2:19
மரத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே?

Ezekiel 20:39
இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக் கேட்கமனதில்லாதிருந்தால், நீங்கள் போய் அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Jeremiah 44:17
எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.

Jeremiah 32:29
இந்த நகரத்துக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயர் உட்பிரவேசித்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்.

Jeremiah 19:13
எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Jeremiah 9:9
இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 5:29
இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 5:9
இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 66:3
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.

Isaiah 65:11
ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறையவார்க்கிறவர்களே,

Deuteronomy 32:37
அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக்குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?


Tags பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது அவைகள் அவைகளே உன் வீதம் அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து போஜனபலியையும் செலுத்துகிறாய் இவைகளின்மேல் பிரியப்படுவேனோ
ஏசாயா 57:6 Concordance ஏசாயா 57:6 Interlinear ஏசாயா 57:6 Image