எரேமியா 3:9
பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.
Tamil Indian Revised Version
பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினால் தேசம் தீட்டுப்பட்டுப்போனது; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் செய்துகொண்டிருந்தாள் என்றார்.
Tamil Easy Reading Version
யூதா கவலைப்படாமல், அவள் வேசியைப் போன்று நடித்துக்கொண்டிருந்தாள். எனவே அவள் தன் நாட்டை ‘அசுத்தம்’ ஆக்கிவிட்டாள். கல்லாலும் மரத்தாலும் ஆன விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதின் மூலம் அவள் சோரமாகிய பாவத்தைச் செய்தாள்.
திருவிவிலியம்
விபசாரம் செய்வது அவளுக்கு வெகு எளிதாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் செய்து நாட்டைத் தீட்டுப்படுத்தினாள்.
King James Version (KJV)
And it came to pass through the lightness of her whoredom, that she defiled the land, and committed adultery with stones and with stocks.
American Standard Version (ASV)
And it came to pass through the lightness of her whoredom, that the land was polluted, and she committed adultery with stones and with stocks.
Bible in Basic English (BBE)
So that through all her loose behaviour the land became unclean, and she was untrue, giving herself to stones and trees.
Darby English Bible (DBY)
And it came to pass through the lightness of her fornication that she polluted the land, and committed adultery with stones and with stocks.
World English Bible (WEB)
It happened through the lightness of her prostitution, that the land was polluted, and she committed adultery with stones and with stocks.
Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, from the vileness of her fornication, that the land is defiled, and she committeth fornication with stone and with wood.
எரேமியா Jeremiah 3:9
பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.
And it came to pass through the lightness of her whoredom, that she defiled the land, and committed adultery with stones and with stocks.
| וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA | |
| מִקֹּ֣ל | miqqōl | mee-KOLE | |
| זְנוּתָ֔הּ | zĕnûtāh | zeh-noo-TA | |
| וַתֶּחֱנַ֖ף | watteḥĕnap | va-teh-hay-NAHF | |
| אֶת | ʾet | et | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וַתִּנְאַ֥ף | wattinʾap | va-teen-AF | |
| אֶת | ʾet | et | |
| הָאֶ֖בֶן | hāʾeben | ha-EH-ven | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הָעֵֽץ׃ | hāʿēṣ | ha-AYTS |
இணை வசனம்
Jeremiah 2:27
அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்.
Isaiah 57:6
பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ?
Jeremiah 3:2
நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.
Jeremiah 2:7
செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.
Jeremiah 10:8
அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.
Ezekiel 16:17
நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி,
Ezekiel 23:10
அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தில் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப்பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானாள்.
Hosea 4:12
என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம் போனார்கள்.
Habakkuk 2:19
மரத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே?
Tags பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்
எரேமியா 3:9 Concordance எரேமியா 3:9 Interlinear எரேமியா 3:9 Image