எரேமியா 44:26
ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கபடுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
ஆகையால், எகிப்து தேசத்தில் குடியிருக்கிற யூதா மக்களாகிய நீங்கள் எல்லோரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய உயிருள்ள வாக்கு என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூத மனிதன் வாயினாலும் இனி என் பெயர் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான பெயரைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களே! ‘நான் எனது பெரும் பெயரைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். யூதாவிலுள்ள ஜனங்களில் எகிப்தில் இப்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கிற எவரும் என் நாமத்தால் மீண்டும் வாக்குறுதி செய்யமாட்டார்கள் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். அவர்கள் மீண்டும் “இதோ கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு…” என்று சத்தியம் செய்யமாட்டார்கள்.
திருவிவிலியம்
எனவே எகிப்து நாட்டில் குடியிருக்கும் யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் கூறுகிறார்: ‘தலைவராகிய வாழும் ஆண்டவர் மேல் ஆணை!’ எனச் சொல்லி எகிப்து நாடு எங்கணும் யூதாவின் எந்தக் குடிமகனும் என் பெயரை வாயால் உச்சரிக்கமாட்டான் என்று என் பெருமை வாய்ந்த பெயரால் நான் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.
King James Version (KJV)
Therefore hear ye the word of the LORD, all Judah that dwell in the land of Egypt; Behold, I have sworn by my great name, saith the LORD, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, The Lord GOD liveth.
American Standard Version (ASV)
Therefore hear ye the word of Jehovah, all Judah that dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, saith Jehovah, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord Jehovah liveth.
Bible in Basic English (BBE)
And now give ear to the word of the Lord, all you of Judah who are living in the land of Egypt: Truly, I have taken an oath by my great name, says the Lord, that my name is no longer to be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, By the life of the Lord God.
Darby English Bible (DBY)
Therefore hear ye the word of Jehovah, all Judah that dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, saith Jehovah, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, [As] the Lord Jehovah liveth.
World English Bible (WEB)
Therefore hear the word of Yahweh, all Judah who dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, says Yahweh, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord Yahweh lives.
Young’s Literal Translation (YLT)
`Therefore, hear ye a word of Jehovah, all Judah who are dwelling in the land of Egypt: Lo, I — I have sworn by My great name, said Jehovah, My name is no more proclaimed by the mouth of any man of Judah, saying, Live doth the Lord Jehovah — in all the land of Egypt.
எரேமியா Jeremiah 44:26
ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கபடுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Therefore hear ye the word of the LORD, all Judah that dwell in the land of Egypt; Behold, I have sworn by my great name, saith the LORD, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, The Lord GOD liveth.
| לָכֵן֙ | lākēn | la-HANE | |
| שִׁמְע֣וּ | šimʿû | sheem-OO | |
| דְבַר | dĕbar | deh-VAHR | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| כָּל | kāl | kahl | |
| יְהוּדָ֕ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| הַיֹּשְׁבִ֖ים | hayyōšĕbîm | ha-yoh-sheh-VEEM | |
| בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem | |
| הִנְנִ֨י | hinnî | heen-NEE | |
| נִשְׁבַּ֜עְתִּי | nišbaʿtî | neesh-BA-tee | |
| בִּשְׁמִ֤י | bišmî | beesh-MEE | |
| הַגָּדוֹל֙ | haggādôl | ha-ɡa-DOLE | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| אִם | ʾim | eem | |
| יִהְיֶה֩ | yihyeh | yee-YEH | |
| ע֨וֹד | ʿôd | ode | |
| שְׁמִ֜י | šĕmî | sheh-MEE | |
| נִקְרָ֣א׀ | niqrāʾ | neek-RA | |
| בְּפִ֣י׀ | bĕpî | beh-FEE | |
| כָּל | kāl | kahl | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| אֹמֵ֛ר | ʾōmēr | oh-MARE | |
| חַי | ḥay | hai | |
| אֲדֹנָ֥י | ʾădōnāy | uh-doh-NAI | |
| יְהוִ֖ה | yĕhwi | yeh-VEE | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets | |
| מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |
இணை வசனம்
Hebrews 6:13
ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:
Ezekiel 20:39
இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக் கேட்கமனதில்லாதிருந்தால், நீங்கள் போய் அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Psalm 50:16
தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
Genesis 22:16
நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதனென்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக்காரியத்தைச் செய்தபடியால்;
Isaiah 48:1
இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.
Jeremiah 4:2
நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.
Jeremiah 5:2
அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே.
Amos 6:8
நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரமனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
Hebrews 6:18
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
Hebrews 3:18
பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா?
Zephaniah 1:4
நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
Amos 8:7
அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.
Numbers 14:28
நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
Deuteronomy 32:40
நான் என் கரத்தை வானத்திற்குநேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.
Psalm 89:34
என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.
Isaiah 62:8
இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.
Jeremiah 7:9
நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி,
Jeremiah 22:5
நீங்கள் இந்த வார்த்தைகளைக்கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போம் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 46:18
பர்வதங்களில் தாபோரும் சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறார்.
Amos 6:10
அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்துவெளியேகொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மெளனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான்.
Numbers 14:21
பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Tags ஆகையால் எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் இதோ கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கபடுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 44:26 Concordance எரேமியா 44:26 Interlinear எரேமியா 44:26 Image