Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 6:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 6 எரேமியா 6:14

எரேமியா 6:14
சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

Tamil Indian Revised Version
சமாதானமில்லாமலிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் மக்களின் காயங்களை மேலோட்டமாகக் குணமாக்குகிறார்கள்.

Tamil Easy Reading Version
என்னுடைய ஜனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப் போடவேண்டும். அவர்கள் சிறிய காயங்களுக்கு, சிகிச்சை செய்வதுபோன்று, அவர்கள் புண்களுக்கு சிகிச்சை செய்கின்றனர். ‘இது சரியாக இருக்கிறது, எல்லாம் சரியாக இருக்கிறது!’ என்று கூறுகிறார்கள். ஆனால் அது சரியாக இல்லை!

திருவிவிலியம்
⁽அமைதியே இல்லாதபொழுது,␢ ‘அமைதி, அமைதி’ என்று கூறி␢ என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை␢ மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.⁾

Jeremiah 6:13Jeremiah 6Jeremiah 6:15

King James Version (KJV)
They have healed also the hurt of the daughter of my people slightly, saying, Peace, peace; when there is no peace.

American Standard Version (ASV)
They have healed also the hurt of my people slightly, saying, Peace, peace; when there is no peace.

Bible in Basic English (BBE)
And they have made little of the wounds of my people, saying, Peace, peace; when there is no peace.

Darby English Bible (DBY)
And they have healed the breach of the daughter of my people lightly, saying, Peace, peace! when there is no peace.

World English Bible (WEB)
They have healed also the hurt of my people slightly, saying, Peace, peace; when there is no peace.

Young’s Literal Translation (YLT)
And they heal the breach of the daughter of my people slightly, Saying, `Peace, peace!’ and there is no peace.

எரேமியா Jeremiah 6:14
சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.
They have healed also the hurt of the daughter of my people slightly, saying, Peace, peace; when there is no peace.

וַֽיְרַפְּא֞וּwayrappĕʾûva-ra-peh-OO
אֶתʾetet
שֶׁ֤בֶרšeberSHEH-ver
עַמִּי֙ʿammiyah-MEE
עַלʿalal
נְקַלָּ֔הnĕqallâneh-ka-LA
לֵאמֹ֖רlēʾmōrlay-MORE
שָׁל֣וֹם׀šālômsha-LOME
שָׁל֑וֹםšālômsha-LOME
וְאֵ֖יןwĕʾênveh-ANE
שָׁלֽוֹם׃šālômsha-LOME

இணை வசனம்

Ezekiel 13:10
சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

Jeremiah 23:17
அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.

Jeremiah 14:13
அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.

Jeremiah 4:10
அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்.

Lamentations 2:14
உன் தீர்க்கதரிசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காக தரிசித்தார்கள்.

2 Peter 2:18
வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.

2 Peter 2:1
கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

Micah 2:11
மனம்போகிற போக்கின்படிபோய், அபத்தமானதை உரைக்கிற ஒருவன், திராட்சரசத்தையும் மதுபானத்தையுங்குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே ஜனத்திற்கு ஏற்ற பிரசங்கியாயிருப்பான்.

Jeremiah 28:3
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக்கொண்டுவரப்பண்ணுவேன்.

Jeremiah 14:17
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.

Jeremiah 8:11
சமாதானமில்லாதிருதும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

Jeremiah 5:12
அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,

Isaiah 30:26
கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.

Isaiah 1:6
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.

Ezekiel 13:22
நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாய் முறியப்பண்ணினபடியினாலும், துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடே காக்கவுங் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும்,


Tags சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்
எரேமியா 6:14 Concordance எரேமியா 6:14 Interlinear எரேமியா 6:14 Image