Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 6:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 6 நியாயாதிபதிகள் 6:13

நியாயாதிபதிகள் 6:13
அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவரே, கர்த்தர் எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் எங்களுக்கு ஏன் சம்பவித்தது? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர்களின் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

Tamil Easy Reading Version
அப்போது கிதியோன், “கர்த்தர் எங்களோடிருந்தால் எங்களுக்கு ஏன் இத்தனைத் துன்பங்கள் நேருகின்றன? எங்கள் முற்பிதாக்களுக்கு அவர் அற்புதமானக் காரியங்களைச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். கர்த்தர், தங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்ததாக எங்கள் முற்பிதாக்கள் கூறினார்கள். ஆனால் கர்த்தர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். மீதியானியர் எங்களைத் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் அனுமதித்தார்” என்றான்.

திருவிவிலியம்
கிதியோன் அவரிடம், “என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே? இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்? எம்மை மிதியானியரின் கைகளில் ஒப்படைத்துவிட்டாரே!” என்றார்.

Judges 6:12Judges 6Judges 6:14

King James Version (KJV)
And Gideon said unto him, Oh my Lord, if the LORD be with us, why then is all this befallen us? and where be all his miracles which our fathers told us of, saying, Did not the LORD bring us up from Egypt? but now the LORD hath forsaken us, and delivered us into the hands of the Midianites.

American Standard Version (ASV)
And Gideon said unto him, Oh, my lord, if Jehovah is with us, why then is all this befallen us? and where are all his wondrous works which our fathers told us of, saying, Did not Jehovah bring us up from Egypt? but now Jehovah hath cast us off, and delivered us into the hand of Midian.

Bible in Basic English (BBE)
Then Gideon said to him, O my lord, if the Lord is with us why has all this come on us? And where are all his works of power, of which our fathers have given us word, saying, Did not the Lord take us out of Egypt? But now he has given us up, handing us over to the power of Midian.

Darby English Bible (DBY)
And Gideon said to him, “Pray, sir, if the LORD is with us, why then has all this befallen us? And where are all his wonderful deeds which our fathers recounted to us, saying, ‘Did not the LORD bring us up from Egypt?’ But now the LORD has cast us off, and given us into the hand of Mid’ian.”

Webster’s Bible (WBT)
And Gideon said to him, O my Lord, if the LORD is with us, why then hath all this befallen us? and where are all his miracles which our fathers told us of, saying, Did not the LORD bring us up from Egypt? but now the LORD hath forsaken us, and delivered us into the hands of the Midianites.

World English Bible (WEB)
Gideon said to him, Oh, my lord, if Yahweh is with us, why then has all this happened to us? and where are all his wondrous works which our fathers told us of, saying, Did not Yahweh bring us up from Egypt? but now Yahweh has cast us off, and delivered us into the hand of Midian.

Young’s Literal Translation (YLT)
And Gideon saith unto him, `O, my lord — and Jehovah is with us! — and why hath all this found us? and where `are’ all His wonders which our fathers recounted to us, saying, Hath not Jehovah brought us up out of Egypt? and now Jehovah hath left us, and doth give us into the hand of Midian.’

நியாயாதிபதிகள் Judges 6:13
அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.
And Gideon said unto him, Oh my Lord, if the LORD be with us, why then is all this befallen us? and where be all his miracles which our fathers told us of, saying, Did not the LORD bring us up from Egypt? but now the LORD hath forsaken us, and delivered us into the hands of the Midianites.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָ֤יוʾēlāyway-LAV
גִּדְעוֹן֙gidʿônɡeed-ONE
בִּ֣יbee
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
וְיֵ֤שׁwĕyēšveh-YAYSH
יְהוָה֙yĕhwāhyeh-VA
עִמָּ֔נוּʿimmānûee-MA-noo
וְלָ֥מָּהwĕlāmmâveh-LA-ma
מְצָאַ֖תְנוּmĕṣāʾatnûmeh-tsa-AT-noo
כָּלkālkahl
זֹ֑אתzōtzote
וְאַיֵּ֣הwĕʾayyēveh-ah-YAY
כָֽלkālhahl
נִפְלְאֹתָ֡יוniplĕʾōtāywneef-leh-oh-TAV
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
סִפְּרוּsippĕrûsee-peh-ROO
לָ֨נוּlānûLA-noo
אֲבוֹתֵ֜ינוּʾăbôtênûuh-voh-TAY-noo
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
הֲלֹ֤אhălōʾhuh-LOH
מִמִּצְרַ֙יִם֙mimmiṣrayimmee-meets-RA-YEEM
הֶֽעֱלָ֣נוּheʿĕlānûheh-ay-LA-noo
יְהוָ֔הyĕhwâyeh-VA
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
נְטָשָׁ֣נוּnĕṭāšānûneh-ta-SHA-noo
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַֽיִּתְּנֵ֖נוּwayyittĕnēnûva-yee-teh-NAY-noo
בְּכַףbĕkapbeh-HAHF
מִדְיָֽן׃midyānmeed-YAHN

இணை வசனம்

Psalm 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.

Psalm 89:49
ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?

2 Chronicles 15:2
அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

Romans 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

Jeremiah 23:33
கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும்.

Isaiah 63:15
தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?

Isaiah 59:1
இதோ, இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

Isaiah 41:17
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

Psalm 78:3
அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

Psalm 77:7
ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?

Psalm 27:9
உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.

Deuteronomy 31:17
அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.

Deuteronomy 30:17
நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப்பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்,

Deuteronomy 29:24
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.

Numbers 14:14
கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள், இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.

Exodus 33:14
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.

Genesis 25:22
அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.


Tags அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி என் ஆண்டவனே கர்த்தர் எங்களோடே இருந்தால் இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன் கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்
நியாயாதிபதிகள் 6:13 Concordance நியாயாதிபதிகள் 6:13 Interlinear நியாயாதிபதிகள் 6:13 Image