Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 10:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 10 லூக்கா 10:7

லூக்கா 10:7
அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.

Tamil Indian Revised Version
அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள்.

Tamil Easy Reading Version
அமைதியான வீட்டில் தங்குங்கள். அவ்வீட்டிலுள்ள மக்கள் தரும் உணவை உண்டு, பானத்தைப் பருகுங்கள். ஒரு வேலைக்காரனுக்குச் சம்பளம் தரப்படவேண்டும். இன்னொரு வீட்டில் தங்கும்பொருட்டு அந்த வீட்டைவிட்டுச் செல்லாதீர்கள்.

திருவிவிலியம்
அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில், வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.

Luke 10:6Luke 10Luke 10:8

King James Version (KJV)
And in the same house remain, eating and drinking such things as they give: for the labourer is worthy of his hire. Go not from house to house.

American Standard Version (ASV)
And in that same house remain, eating and drinking such things as they give: for the laborer is worthy of his hire. Go not from house to house.

Bible in Basic English (BBE)
And keep in that same house, taking what food and drink they give you: for the worker has a right to his reward. Do not go from house to house.

Darby English Bible (DBY)
And in the same house abide, eating and drinking such things as they have; for the workman is worthy of his hire. Remove not from house to house.

World English Bible (WEB)
Remain in that same house, eating and drinking the things they give, for the laborer is worthy of his wages. Don’t go from house to house.

Young’s Literal Translation (YLT)
`And in that house remain, eating and drinking the things they have, for worthy `is’ the workman of his hire; go not from house to house,

லூக்கா Luke 10:7
அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.
And in the same house remain, eating and drinking such things as they give: for the labourer is worthy of his hire. Go not from house to house.

ἐνenane
αὐτῇautēaf-TAY
δὲdethay
τῇtay
οἰκίᾳoikiaoo-KEE-ah
μένετεmeneteMAY-nay-tay
ἐσθίοντεςesthiontesay-STHEE-one-tase
καὶkaikay
πίνοντεςpinontesPEE-none-tase
τὰtata
παρ'parpahr
αὐτῶν·autōnaf-TONE
ἄξιοςaxiosAH-ksee-ose
γὰρgargahr
hooh
ἐργάτηςergatēsare-GA-tase
τοῦtoutoo
μισθοῦmisthoumee-STHOO
αὐτοῦautouaf-TOO
ἐστινestinay-steen
μὴmay
μεταβαίνετεmetabainetemay-ta-VAY-nay-tay
ἐξexayks
οἰκίαςoikiasoo-KEE-as
εἰςeisees
οἰκίανoikianoo-KEE-an

இணை வசனம்

Deuteronomy 12:12
உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் வேலைக்காரரும், உங்கள் வேலைக்காரிகளும், உங்களோடு பங்கும் சுதந்தரமும் இல்லாமல் உங்கள் வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.

2 Timothy 2:6
நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.

1 Timothy 5:17
நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

1 Timothy 5:13
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.

Philippians 4:17
உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்.

Galatians 6:6
மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்.

1 Corinthians 9:4
புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?

Acts 16:40
அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.

Acts 16:34
பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.

Acts 16:15
அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்களென்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.

Luke 9:4
எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.

Mark 6:10
பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள்.

Matthew 10:10
வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

Deuteronomy 12:18
உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக்காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.

3 John 1:5
பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.


Tags அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள் வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்
லூக்கா 10:7 Concordance லூக்கா 10:7 Interlinear லூக்கா 10:7 Image