நாகூம் 1:10
அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும் தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் மிக நெருக்கமாக இருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாக இருக்கும்போதும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கும்போதும், அவர்கள் முழுவதும் காய்ந்துபோன சருகைப்போல எரிந்துபோவார்கள்.
Tamil Easy Reading Version
முட்செடிகள் பானையின் கீழ் எரிந்து அழிவது போல நீங்கள் முற்றிலும் அழிக்கப்படுவீர்கள். காய்ந்துப்போன பதர் வேகமாக எரிவதுப்போன்று நீங்கள் வெகு விரைவாக அழிக்கப்படுவீர்கள்.
திருவிவிலியம்
⁽குடிவெறியில்␢ மயங்கிக் கிடக்கும் அவர்கள்␢ பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும்␢ காய்ந்த சருகுபோலும்␢ முற்றிலும் எரிந்துபோவார்கள்.⁾
King James Version (KJV)
For while they be folden together as thorns, and while they are drunken as drunkards, they shall be devoured as stubble fully dry.
American Standard Version (ASV)
For entangled like thorns, and drunken as with their drink, they are consumed utterly as dry stubble.
Bible in Basic English (BBE)
For though they are like twisted thorns, and are overcome as with drink, they will come to destruction like stems of grass fully dry.
Darby English Bible (DBY)
Though they be tangled together [as] thorns, and be as drenched from their drink, they shall be devoured as dry stubble, completely.
World English Bible (WEB)
For entangled like thorns, and drunken as with their drink, they are consumed utterly like dry stubble.
Young’s Literal Translation (YLT)
For while princes `are’ perplexed, And with their drink are drunken, They have been consumed as stubble fully dried.
நாகூம் Nahum 1:10
அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும் தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள்.
For while they be folden together as thorns, and while they are drunken as drunkards, they shall be devoured as stubble fully dry.
| כִּ֚י | kî | kee | |
| עַד | ʿad | ad | |
| סִירִ֣ים | sîrîm | see-REEM | |
| סְבֻכִ֔ים | sĕbukîm | seh-voo-HEEM | |
| וּכְסָבְאָ֖ם | ûkĕsobʾām | oo-heh-sove-AM | |
| סְבוּאִ֑ים | sĕbûʾîm | seh-voo-EEM | |
| אֻ֨כְּל֔וּ | ʾukkĕlû | OO-keh-LOO | |
| כְּקַ֥שׁ | kĕqaš | keh-KAHSH | |
| יָבֵ֖שׁ | yābēš | ya-VAYSH | |
| מָלֵֽא׃ | mālēʾ | ma-LAY |
இணை வசனம்
Malachi 4:1
இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Micah 7:4
அவர்களில் நல்லவன் முட்செடிக் காத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கக் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு.
Nahum 3:11
நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் சத்துருவுக்குத் தப்ப அரணான கோட்டையைத் தேடுவாய்.
1 Thessalonians 5:2
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
Jeremiah 51:57
அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.
Jeremiah 51:39
அவர்கள் களிக்கும் சமயத்திலே நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக்; குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 27:4
உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;
Isaiah 10:17
இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும் நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,
Isaiah 9:18
ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், பகை திரண்டு எழும்பும்.
Isaiah 5:24
இதினிமித்தம் அக்கினிஜுவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே.
Psalm 68:2
புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.
2 Samuel 23:6
பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக் கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமமானவர்கள்.
2 Samuel 13:28
அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன், உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.
1 Samuel 25:36
அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.
Tags அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும் தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும் அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள்
நாகூம் 1:10 Concordance நாகூம் 1:10 Interlinear நாகூம் 1:10 Image