நெகேமியா 2:3
ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.
Tamil Indian Revised Version
ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என்னுடைய தகப்பன்மார்களின் கல்லறைகள் இருக்கும் இடமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டும் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இல்லாமல் இருப்பது எப்படி என்றேன்.
Tamil Easy Reading Version
பயந்தாலும் கூட நான் அரசனிடம், “அரசன் என்றென்றும் வாழ்வாராக! நான் துக்கமாய் இருக்கிறேன். ஏனென்றால் எனது முற்பிதாக்களின் கல்லறைகள் உள்ள நகரம் பாழாயிற்று. அதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன” என்றேன்.
திருவிவிலியம்
நான் மன்னரை நோக்கி, “மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்?” என்றேன்.⒫
King James Version (KJV)
And said unto the king, Let the king live for ever: why should not my countenance be sad, when the city, the place of my fathers’ sepulchres, lieth waste, and the gates thereof are consumed with fire?
American Standard Version (ASV)
And I said unto the king, Let the king live for ever: why should not my countenance be sad, when the city, the place of my fathers’ sepulchres, lieth waste, and the gates thereof are consumed with fire?
Bible in Basic English (BBE)
And said to the king, May the king be living for ever: is it not natural for my face to be sad, when the town, the place where the bodies of my fathers are at rest, has been made waste and its doorways burned with fire?
Darby English Bible (DBY)
And I said to the king, Let the king live for ever! Why should not my countenance be sad, when the city, the place of my fathers’ sepulchres, lies waste, and its gates are consumed with fire?
Webster’s Bible (WBT)
And said to the king, Let the king live for ever: why should not my countenance be sad, when the city, the place of my fathers’ sepulchers, lieth waste, and its gates are consumed with fire?
World English Bible (WEB)
I said to the king, Let the king live forever: why should not my face be sad, when the city, the place of my fathers’ tombs, lies waste, and the gates of it are consumed with fire?
Young’s Literal Translation (YLT)
and say to the king, `Let the king to the age live! wherefore should not my face be sad, when the city, the place of the graves of my fathers, `is’ a waste, and its gates have been consumed with fire?’
நெகேமியா Nehemiah 2:3
ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.
And said unto the king, Let the king live for ever: why should not my countenance be sad, when the city, the place of my fathers' sepulchres, lieth waste, and the gates thereof are consumed with fire?
| וָֽאֹמַ֣ר | wāʾōmar | va-oh-MAHR | |
| לַמֶּ֔לֶךְ | lammelek | la-MEH-lek | |
| הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| לְעוֹלָ֣ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| יִֽחְיֶ֑ה | yiḥĕye | yee-heh-YEH | |
| מַדּ֜וּעַ | maddûaʿ | MA-doo-ah | |
| לֹֽא | lōʾ | loh | |
| יֵרְע֣וּ | yērĕʿû | yay-reh-OO | |
| פָנַ֗י | pānay | fa-NAI | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| הָעִ֜יר | hāʿîr | ha-EER | |
| בֵּית | bêt | bate | |
| קִבְר֤וֹת | qibrôt | keev-ROTE | |
| אֲבֹתַי֙ | ʾăbōtay | uh-voh-TA | |
| חֲרֵבָ֔ה | ḥărēbâ | huh-ray-VA | |
| וּשְׁעָרֶ֖יהָ | ûšĕʿārêhā | oo-sheh-ah-RAY-ha | |
| אֻכְּל֥וּ | ʾukkĕlû | oo-keh-LOO | |
| בָאֵֽשׁ׃ | bāʾēš | va-AYSH |
இணை வசனம்
Nehemiah 1:3
அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.
Daniel 2:4
அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரியபாஷையிலே சொன்னார்கள்.
1 Kings 1:31
அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என் ஆண்டவனாகிய தாவீதுராஜா என்றைக்கும் வாழ்க என்றாள்.
Daniel 5:10
ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வாடவும் வேண்டியதில்லை.
Psalm 137:6
நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
Daniel 6:21
அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க.
Daniel 6:6
பின்பு அந்தப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
2 Chronicles 32:33
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2 Chronicles 28:27
ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2 Chronicles 21:20
அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
Daniel 3:9
ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே நீர் என்றும் வாழ்க.
Lamentations 2:9
அவள் வாசல்கள் தரையில் அமிழ்ந்திக்கிடக்கிறது; அவள் தாழ்ப்பாள்களை முறித்து உடைத்துப்போட்டார்; அவள் ராஜாவும் அவள் பிரபுக்களும் புறஜாதியாருக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை.
Psalm 102:14
உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
Tags ராஜாவை நோக்கி ராஜா என்றைக்கும் வாழ்க என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும் அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்
நெகேமியா 2:3 Concordance நெகேமியா 2:3 Interlinear நெகேமியா 2:3 Image