1 சாமுவேல் 10:27
ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டு வராமல் அவனை அசட்டைபண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன் போல இருந்தான்.
Tamil Indian Revised Version
ஆனாலும் சில பயனற்ற மக்கள்: இவனா நம்மைக் காப்பாற்றப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டுவராமல் அவனை அசட்டைசெய்தார்கள்; அவனோ காது கேட்காதவனைப்போல இருந்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் சில கயவர்கள், “இவன் எவ்வாறு நம்மைக் காப்பாற்றுவான்?” என்றனர். அவர்கள் சவுலைப் பற்றி கெட்டவற்றைக் கூறி அவனுக்கு அன்பளிப்புக்களைக் கொடுக்க மறுத்தனர். சவுல் ஒன்றும் கூறவில்லை. நாகாஸ் அம்மோனிய அரசன், காத் மற்றும் ரூபன் கோத்திரங்களை காயப்படுத்திக் கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு ஆண்களின் வலது கண்ணை பிடுங்கி யாரும் அவர்களுக்கு உதவி செய்யாதபடி தடுத்தான். யோர்தான் நதி ஓரத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் ஆண்களுக்கும் அப்படியே செய்தான். எனவே 7,000 இஸ்ரவேலர்கள் அம்மோனியரிடமிருந்து தப்பி யாபேஸ் கீலேயாத்திற்கு வந்தனர்.
திருவிவிலியம்
ஆனால், தீயோர் சிலர், “இவன் நம்மை எவ்வாறு மீட்க முடியும்?” என்று கூறி, அவரைப் புறக்கணித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு எதுவும் தரவில்லை. அவரோ அமைதியாக இருந்தார்.
King James Version (KJV)
But the children of Belial said, How shall this man save us? And they despised him, and brought no presents. But he held his peace.
American Standard Version (ASV)
But certain worthless fellows said, How shall this man save us? And they despised him, and brought him no present. But he held his peace.
Bible in Basic English (BBE)
But certain good-for-nothing persons said, How is this man to be our saviour? And having no respect for him, they gave him no offering.
Darby English Bible (DBY)
But the children of Belial said, How should this man save us? And they despised him, and brought him no gifts. But he was as one deaf.
Webster’s Bible (WBT)
But the children of Belial said, How shall this man save us? And they despised him, and brought him no presents. But he held his peace.
World English Bible (WEB)
But certain worthless fellows said, How shall this man save us? They despised him, and brought him no present. But he held his peace.
Young’s Literal Translation (YLT)
and the sons of worthlessness have said, `What! this one doth save us!’ and they despise him, and have not brought to him a present; and he is as one deaf.
1 சாமுவேல் 1 Samuel 10:27
ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டு வராமல் அவனை அசட்டைபண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன் போல இருந்தான்.
But the children of Belial said, How shall this man save us? And they despised him, and brought no presents. But he held his peace.
| וּבְנֵ֧י | ûbĕnê | oo-veh-NAY | |
| בְלִיַּ֣עַל | bĕliyyaʿal | veh-lee-YA-al | |
| אָֽמְר֗וּ | ʾāmĕrû | ah-meh-ROO | |
| מַה | ma | ma | |
| יֹּֽשִׁעֵ֙נוּ֙ | yōšiʿēnû | yoh-shee-A-NOO | |
| זֶ֔ה | ze | zeh | |
| וַיִּבְזֻ֕הוּ | wayyibzuhû | va-yeev-ZOO-hoo | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| הֵבִ֥יאוּ | hēbîʾû | hay-VEE-oo | |
| ל֖וֹ | lô | loh | |
| מִנְחָ֑ה | minḥâ | meen-HA | |
| וַיְהִ֖י | wayhî | vai-HEE | |
| כְּמַֽחֲרִֽישׁ׃ | kĕmaḥărîš | keh-MA-huh-REESH |
இணை வசனம்
Deuteronomy 13:13
நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,
2 Chronicles 17:5
ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாததுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது.
1 Kings 10:25
வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
1 Samuel 2:12
ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.
Acts 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
Acts 7:35
உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யாரென்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
Matthew 27:12
பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
Matthew 2:11
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
Isaiah 36:21
அவர்களோ அவனுக்கு ஒருவார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
Psalm 72:10
தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
Psalm 38:13
நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.
2 Chronicles 13:7
பேலியாளின் மக்களாகிய வீணர் அவனோடேகூடி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கக் கூடாமல் வாலவயதும் திடனற்ற மனதுமாயிருக்கையில், அவனுக்கு விரோதமாய்த் தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.
1 Kings 4:21
நதிதொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லைமட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனைச் சேவித்தார்கள்.
2 Samuel 20:1
அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான்.
2 Samuel 8:2
அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.
1 Samuel 11:12
அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனρஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.
Tags ஆனாலும் பேலியாளின் மக்கள் இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி அவனுக்குக் காணிக்கை கொண்டு வராமல் அவனை அசட்டைபண்ணினார்கள் அவனோ காதுகேளாதவன் போல இருந்தான்
1 சாமுவேல் 10:27 Concordance 1 சாமுவேல் 10:27 Interlinear 1 சாமுவேல் 10:27 Image