Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 20:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 20 2 நாளாகமம் 20:17

2 நாளாகமம் 20:17
இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.

Tamil Indian Revised Version
இந்தப் போர் செய்கிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனிதர்களே, எருசலேம் மக்களே, நீங்கள் பொறுத்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்றான்.

Tamil Easy Reading Version
இப்போரில் நீங்கள் சண்டையிடவே வேண்டாம். உங்கள் இடங்களில் உறுதியாக நில்லுங்கள். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவதைக் காண்பீர்கள். யூதா நாட்டினரே! எருசலேமியர்களே! அஞ்சாதீர்கள். கவலைப்படாதீர்கள்! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். எனவே நாளை அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள்’ என்றார்” என்று சொன்னான்.

திருவிவிலியம்
அங்கே நீங்கள் போரிட வேண்டியதில்லை; அணிவகுத்து நின்றாலே போதும். யூதாவே! எருசலேமே! உங்கள் சார்பாக ஆண்டவர் கொள்ளும் வெற்றியைக் காண்பீர்கள்! எனவே, அஞ்சாமலும் நிலைகுலையாமலும் இருங்கள். நாளை அவர்களை நோக்கிச் செல்லுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்” என்றார்.⒫

2 Chronicles 20:162 Chronicles 202 Chronicles 20:18

King James Version (KJV)
Ye shall not need to fight in this battle: set yourselves, stand ye still, and see the salvation of the LORD with you, O Judah and Jerusalem: fear not, nor be dismayed; to morrow go out against them: for the LORD will be with you.

American Standard Version (ASV)
Ye shall not need to fight in this `battle’: set yourselves, stand ye still, and see the salvation of Jehovah with you, O Judah and Jerusalem; fear not, nor be dismayed: to-morrow go out against them: for Jehovah is with you.

Bible in Basic English (BBE)
There will be no need for you to take up arms in this fight; put yourselves in position, and keep where you are, and you will see the salvation of the Lord with you, O Judah and Jerusalem: have no fear and do not be troubled: go out against them tomorrow, for the Lord is with you.

Darby English Bible (DBY)
Ye shall not have to fight on this occasion: set yourselves, stand and see the salvation of Jehovah [who is] with you! Judah and Jerusalem, fear not nor be dismayed; to-morrow go out against them, and Jehovah will be with you.

Webster’s Bible (WBT)
Ye shall not need to fight in this battle: set yourselves, stand ye still, and see the salvation of the LORD with you, O Judah and Jerusalem: fear not, nor be dismayed; to-morrow go out against them: for the LORD will be with you.

World English Bible (WEB)
You shall not need to fight in this [battle]: set yourselves, stand you still, and see the salvation of Yahweh with you, O Judah and Jerusalem; don’t be afraid, nor be dismayed: tomorrow go out against them: for Yahweh is with you.

Young’s Literal Translation (YLT)
Not for you to fight in this; station yourselves, stand, and see the salvation of Jehovah with you, O Judah and Jerusalem — be not afraid nor fear ye — to-morrow go out before them, and Jehovah `is’ with you.’

2 நாளாகமம் 2 Chronicles 20:17
இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.
Ye shall not need to fight in this battle: set yourselves, stand ye still, and see the salvation of the LORD with you, O Judah and Jerusalem: fear not, nor be dismayed; to morrow go out against them: for the LORD will be with you.

לֹ֥אlōʾloh
לָכֶ֖םlākemla-HEM
לְהִלָּחֵ֣םlĕhillāḥēmleh-hee-la-HAME
בָּזֹ֑אתbāzōtba-ZOTE
הִתְיַצְּב֣וּhityaṣṣĕbûheet-ya-tseh-VOO
עִמְד֡וּʿimdûeem-DOO
וּרְא֣וּûrĕʾûoo-reh-OO
אֶתʾetet
יְשׁוּעַת֩yĕšûʿatyeh-shoo-AT
יְהוָ֨הyĕhwâyeh-VA
עִמָּכֶ֜םʿimmākemee-ma-HEM
יְהוּדָ֣הyĕhûdâyeh-hoo-DA
וִירֽוּשָׁלִַ֗םwîrûšālaimvee-roo-sha-la-EEM
אַלʾalal
תִּֽירְאוּ֙tîrĕʾûtee-reh-OO
וְאַלwĕʾalveh-AL
תֵּחַ֔תּוּtēḥattûtay-HA-too
מָחָר֙māḥārma-HAHR
צְא֣וּṣĕʾûtseh-OO
לִפְנֵיהֶ֔םlipnêhemleef-nay-HEM
וַֽיהוָ֖הwayhwâvai-VA
עִמָּכֶֽם׃ʿimmākemee-ma-HEM

இணை வசனம்

Exodus 14:13
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

2 Chronicles 15:2
அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

Matthew 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

Isaiah 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

Numbers 14:9
கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பபண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.

Lamentations 3:26
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

Psalm 46:10
நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

Psalm 46:7
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

2 Chronicles 32:8
அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

Romans 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

Isaiah 8:9
ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூர தேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,

Isaiah 30:15
நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;

Exodus 14:25
அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.

Amos 5:14
நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.

Isaiah 30:7
எகிப்தியர் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன்.

2 Chronicles 20:22
அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

Matthew 1:23
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

2 Timothy 4:22
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.


Tags இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல யூதா மனுஷரே எருசலேம் ஜனங்களே நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள் கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்
2 நாளாகமம் 20:17 Concordance 2 நாளாகமம் 20:17 Interlinear 2 நாளாகமம் 20:17 Image