Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 11:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 11 2 இராஜாக்கள் 11:14

2 இராஜாக்கள் 11:14
இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.

Tamil Indian Revised Version
இதோ, முறைமையின்படியே ராஜா தூண் அருகில் நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள்.

Tamil Easy Reading Version
அரசன் வழக்கமாக நிற்கும் தூணருகில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். அரசனுக்காக அதிகாரிகள் எக்காளம் வாசிப்பதையும் கண்டாள். ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதையும் பார்த்தாள். அத்தாலியாள் அவள் நிலை குலைந்ததைக் காட்ட தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டாள். பின் அவள் “துரோகம்! துரோகம்!” என்று கத்தினாள்.

திருவிவிலியம்
மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத் தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவள் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “சதி! சதி!” என்று கூக்குரலிட்டாள்.

2 Kings 11:132 Kings 112 Kings 11:15

King James Version (KJV)
And when she looked, behold, the king stood by a pillar, as the manner was, and the princes and the trumpeters by the king, and all the people of the land rejoiced, and blew with trumpets: and Athaliah rent her clothes, and cried, Treason, Treason.

American Standard Version (ASV)
and she looked, and, behold, the king stood by the pillar, as the manner was, and the captains and the trumpets by the king; and all the people of the land rejoiced, and blew trumpets. Then Athaliah rent her clothes, and cried, Treason! treason!

Bible in Basic English (BBE)
And looking, she saw the king in his regular place by the pillar, and the captains and the horns near him; and all the people of the land giving signs of joy and sounding the horns. Then Athaliah, violently parting her robes, gave a cry, saying, Broken faith, broken faith!

Darby English Bible (DBY)
And she looked, and behold, the king stood on the dais, according to the custom, and the princes and the trumpeters were by the king; and all the people of the land rejoiced, and blew with trumpets. And Athaliah rent her garments and cried, Conspiracy! Conspiracy!

Webster’s Bible (WBT)
And when she looked, behold, the king stood by a pillar, as the manner was, and the princes and the trumpeters by the king, and all the people of the land rejoiced, and blew with trumpets. And Athaliah rent her clothes, and cried, Treason, treason.

World English Bible (WEB)
and she looked, and, behold, the king stood by the pillar, as the manner was, and the captains and the trumpets by the king; and all the people of the land rejoiced, and blew trumpets. Then Athaliah tore her clothes, and cried, Treason! treason!

Young’s Literal Translation (YLT)
and looketh, and lo, the king is standing by the pillar, according to the ordinance, and the heads, and the trumpets, `are’ by the king, and all the people of the land are rejoicing, and blowing with trumpets, and Athaliah rendeth her garments, and calleth, `Conspiracy! conspiracy!’

2 இராஜாக்கள் 2 Kings 11:14
இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.
And when she looked, behold, the king stood by a pillar, as the manner was, and the princes and the trumpeters by the king, and all the people of the land rejoiced, and blew with trumpets: and Athaliah rent her clothes, and cried, Treason, Treason.

וַתֵּ֡רֶאwattēreʾva-TAY-reh
וְהִנֵּ֣הwĕhinnēveh-hee-NAY
הַמֶּלֶךְ֩hammelekha-meh-lek
עֹמֵ֨דʿōmēdoh-MADE
עַֽלʿalal
הָעַמּ֜וּדhāʿammûdha-AH-mood
כַּמִּשְׁפָּ֗טkammišpāṭka-meesh-PAHT
וְהַשָּׂרִ֤יםwĕhaśśārîmveh-ha-sa-REEM
וְהַחֲצֹֽצְרוֹת֙wĕhaḥăṣōṣĕrôtveh-ha-huh-tsoh-tseh-ROTE
אֶלʾelel
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וְכָלwĕkālveh-HAHL
עַ֤םʿamam
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
שָׂמֵ֔חַśāmēaḥsa-MAY-ak
וְתֹקֵ֖עַwĕtōqēaʿveh-toh-KAY-ah
בַּחֲצֹֽצְר֑וֹתbaḥăṣōṣĕrôtba-huh-tsoh-tseh-ROTE
וַתִּקְרַ֤עwattiqraʿva-teek-RA
עֲתַלְיָה֙ʿătalyāhuh-tahl-YA
אֶתʾetet
בְּגָדֶ֔יהָbĕgādêhābeh-ɡa-DAY-ha
וַתִּקְרָ֖אwattiqrāʾva-teek-RA
קֶ֥שֶׁרqešerKEH-sher
קָֽשֶׁר׃qāšerKA-sher

இணை வசனம்

2 Chronicles 34:31
ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தான் செய்வதினாலே, கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழுஇருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணி,

2 Kings 23:3
அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள்.

2 Kings 9:23
அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.

Revelation 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.

Luke 19:37
அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளானகூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித͠Τுச் சந்தோஷப்பட்டு,

1 Kings 1:39
ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.

Proverbs 29:2
நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.

1 Chronicles 12:40
இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள்மேலும் மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய் ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டிய மட்டும் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.

2 Kings 11:10
ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீதுராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.

2 Kings 11:1
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.

1 Kings 18:17
ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.

Numbers 10:1
கர்த்தர் மோசேயை நோக்கி:

Genesis 44:13
அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள்.

Genesis 37:29
பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,


Tags இதோ ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும் ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும் எக்காளம் ஊதுகிறவர்களையும் தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினாள்
2 இராஜாக்கள் 11:14 Concordance 2 இராஜாக்கள் 11:14 Interlinear 2 இராஜாக்கள் 11:14 Image