எரேமியா 12:13
கோதுமையை விதைத்தார்கள், முள்ளுகளை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பிரயோஜனமடையார்கள்; கர்த்தருடைய உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும்பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்.
Tamil Indian Revised Version
கோதுமையை விதைத்தார்கள், முட்களை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பலனடையமாட்டார்கள்; கர்த்தருடைய கடுங்கோபத்தினால் உங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் கோதுமையை விதைப்பார்கள். ஆனால் அவர்கள் முட்களையே அறுவடை செய்வார்கள். அவர்கள் களைத்து போகிறவரை கடுமையாக உழைப்பார்கள். ஆனால் அவர்கள் தமது வேலைக்காக எதையும் பெறமாட்டார்கள். அவர்கள் தங்கள் விளைச்சலுக்காக வெட்கப்படுவார்கள். கர்த்தருடைய கோபம் அவற்றுக்குக் காரணமாயிற்று.”
திருவிவிலியம்
⁽கோதுமையை விதைத்தார்கள்;␢ ஆனால் முட்களையே அறுத்தார்கள்.␢ உழைத்துக் களைத்தார்கள்;␢ ஆயினும் பயனே இல்லை.␢ தங்கள் அறுவடையைக் கண்டு␢ வெட்கம் அடைந்தார்கள்.␢ இதற்கு ஆண்டவரின்␢ கோபக்கனலே காரணம்.⁾
King James Version (KJV)
They have sown wheat, but shall reap thorns: they have put themselves to pain, but shall not profit: and they shall be ashamed of your revenues because of the fierce anger of the LORD.
American Standard Version (ASV)
They have sown wheat, and have reaped thorns; they have put themselves to pain, and profit nothing: and ye shall be ashamed of your fruits, because of the fierce anger of Jehovah.
Bible in Basic English (BBE)
Though good grain was planted, they have got in thorns: they have given themselves pain without profit: they will be shamed on account of their produce, because of the burning wrath of the Lord.
Darby English Bible (DBY)
They have sown wheat, and they reap thorns; they have put themselves to pain, [and] do not profit. Be ye therefore ashamed of your revenues, because of the fierce anger of Jehovah.
World English Bible (WEB)
They have sown wheat, and have reaped thorns; they have put themselves to pain, and profit nothing: and you shall be ashamed of your fruits, because of the fierce anger of Yahweh.
Young’s Literal Translation (YLT)
They sowed wheat, and have thorns reaped, They have become sick — they profit not, And they have been ashamed of your increases, Because of the fierceness of the anger of Jehovah.
எரேமியா Jeremiah 12:13
கோதுமையை விதைத்தார்கள், முள்ளுகளை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பிரயோஜனமடையார்கள்; கர்த்தருடைய உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும்பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்.
They have sown wheat, but shall reap thorns: they have put themselves to pain, but shall not profit: and they shall be ashamed of your revenues because of the fierce anger of the LORD.
| זָרְע֤וּ | zorʿû | zore-OO | |
| חִטִּים֙ | ḥiṭṭîm | hee-TEEM | |
| וְקֹצִ֣ים | wĕqōṣîm | veh-koh-TSEEM | |
| קָצָ֔רוּ | qāṣārû | ka-TSA-roo | |
| נֶחְל֖וּ | neḥlû | nek-LOO | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יוֹעִ֑לוּ | yôʿilû | yoh-EE-loo | |
| וּבֹ֙שׁוּ֙ | ûbōšû | oo-VOH-SHOO | |
| מִתְּבוּאֹ֣תֵיכֶ֔ם | mittĕbûʾōtêkem | mee-teh-voo-OH-tay-HEM | |
| מֵחֲר֖וֹן | mēḥărôn | may-huh-RONE | |
| אַף | ʾap | af | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Haggai 1:6
நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.
Micah 6:15
நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சப்பழங்களையும் ஆலையர்டினபோதிலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை இரசம் குடிப்பதுமில்லை.
Deuteronomy 28:38
மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும்.
Isaiah 55:2
நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.
Leviticus 26:16
நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.
Habakkuk 2:13
இதோ, ஜனங்கள் அக்கினிக்கு இரையாக உழைத்து, ஜனங்கள் விருதாவாக இளைத்துப்போகிறது கர்த்தருடைய செயல் அல்லவோ?
Jeremiah 25:37
அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே சங்காரமாயின.
Jeremiah 4:26
பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.
Romans 6:21
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
Haggai 2:16
அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.
Jeremiah 3:23
குன்றுகளையும் திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே.
Isaiah 31:1
சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!
Isaiah 30:1
பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,
Tags கோதுமையை விதைத்தார்கள் முள்ளுகளை அறுப்பார்கள் பிரயாசப்படுவார்கள் பிரயோஜனமடையார்கள் கர்த்தருடைய உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும்பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்
எரேமியா 12:13 Concordance எரேமியா 12:13 Interlinear எரேமியா 12:13 Image