Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 5:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 5 எரேமியா 5:22

எரேமியா 5:22
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

Tamil Indian Revised Version
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாக வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

Tamil Easy Reading Version
நிச்சயமாக நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள்”என சொல் என்றார். “எனக்கு முன்னால் நீங்கள் பயத்தால் நடுங்கவேண்டும். கடலுக்குக் கரைகளை எல்லையாக உண்டாக்கியவர் நானே. இந்த வழியில் என்றென்றைக்கும் தண்ணீரானது அதனுடைய இடத்தில் இருக்குமாறு செய்தேன். கரையை அலைகள் தாக்கலாம். ஆனால் அவை அதனை அழிக்க முடியாது. அலைகள் இரைந்துக்கொண்டு வரலாம். ஆனால் அது கரையைக் கடந்து போக முடியாது.

திருவிவிலியம்
⁽உங்களுக்கு என் மீது அச்சமில்லையா?␢ என்கிறார் ஆண்டவர்.␢ என் முன்னிலையில்␢ நீங்கள் நடுங்க வேண்டாமா?␢ கடலுக்கு எல்லையாக␢ மணலை வைத்தேன்.␢ இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு,␢ அதனைக் கடக்க முடியாது.␢ அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்;␢ எனினும் அதன்மேல்␢ வெற்றி கொள்ள முடியாது.␢ அவைகள் சீறி முழங்கலாம்;␢ எனினும் அதனை மீற முடியாது.⁾

Jeremiah 5:21Jeremiah 5Jeremiah 5:23

King James Version (KJV)
Fear ye not me? saith the LORD: will ye not tremble at my presence, which have placed the sand for the bound of the sea by a perpetual decree, that it cannot pass it: and though the waves thereof toss themselves, yet can they not prevail; though they roar, yet can they not pass over it?

American Standard Version (ASV)
Fear ye not me? saith Jehovah: will ye not tremble at my presence, who have placed the sand for the bound of the sea, by a perpetual decree, that it cannot pass it? and though the waves thereof toss themselves, yet can they not prevail; though they roar, yet can they not pass over it.

Bible in Basic English (BBE)
Have you no fear of me? says the Lord; will you not be shaking with fear before me, who have put the sand as a limit for the sea, by an eternal order, so that it may not go past it? and though it is ever in motion, it is not able to have its way; though the sound of its waves is loud, they are not able to go past it.

Darby English Bible (DBY)
Will ye not fear me? saith Jehovah. Will ye not tremble at my presence, who have set the sand a bound for the sea by a perpetual decree, and it shall not pass it? and its waves toss themselves, but they do not prevail; and they roar, yet can they not pass over it?

World English Bible (WEB)
Don’t you fear me? says Yahweh: won’t you tremble at my presence, who have placed the sand for the bound of the sea, by a perpetual decree, that it can’t pass it? and though the waves of it toss themselves, yet they can’t prevail; though they roar, yet they can’t pass over it.

Young’s Literal Translation (YLT)
Me do ye not fear, an affirmation of Jehovah? From My presence are ye not pained? Who hath made sand the border of the sea, A limit age-during, and it passeth not over it, They shake themselves, and they are not able, Yea, sounded have its billows, and they pass not over.

எரேமியா Jeremiah 5:22
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?
Fear ye not me? saith the LORD: will ye not tremble at my presence, which have placed the sand for the bound of the sea by a perpetual decree, that it cannot pass it: and though the waves thereof toss themselves, yet can they not prevail; though they roar, yet can they not pass over it?

הַאוֹתִ֨יhaʾôtîha-oh-TEE
לֹאlōʾloh
תִירָ֜אוּtîrāʾûtee-RA-oo
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָֹ֗הyĕhôâyeh-hoh-AH
אִ֤םʾimeem
מִפָּנַי֙mippānaymee-pa-NA
לֹ֣אlōʾloh
תָחִ֔ילוּtāḥîlûta-HEE-loo
אֲשֶׁרʾăšeruh-SHER
שַׂ֤מְתִּיśamtîSAHM-tee
חוֹל֙ḥôlhole
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
לַיָּ֔םlayyāmla-YAHM
חָקḥāqhahk
עוֹלָ֖םʿôlāmoh-LAHM
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יַעַבְרֶ֑נְהוּyaʿabrenhûya-av-REN-hoo
וַיִּֽתְגָּעֲשׁוּ֙wayyitĕggāʿăšûva-yee-teh-ɡa-uh-SHOO
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יוּכָ֔לוּyûkālûyoo-HA-loo
וְהָמ֥וּwĕhāmûveh-ha-MOO
גַלָּ֖יוgallāywɡa-LAV
וְלֹ֥אwĕlōʾveh-LOH
יַעַבְרֻֽנְהוּ׃yaʿabrunĕhûya-av-ROO-neh-hoo

இணை வசனம்

Psalm 119:120
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.

Jeremiah 10:7
ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டிது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.

Psalm 104:9
அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.

Job 38:10
நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:

Deuteronomy 28:58
உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்,

Revelation 15:4
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.

Proverbs 8:29
சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,

Job 26:10
அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.

Luke 12:5
நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Mark 4:39
அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.

Matthew 10:28
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

Nahum 1:4
அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார். பாசனும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.

Amos 9:6
அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவர்களைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

Daniel 6:26
என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன். அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.

Isaiah 66:5
கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே. அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.

Isaiah 50:2
நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக் கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.

Psalm 99:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார். பூமி அசைவதாக.

Psalm 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.

Psalm 33:7
அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.


Tags எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார் அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும் அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும் கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ
எரேமியா 5:22 Concordance எரேமியா 5:22 Interlinear எரேமியா 5:22 Image