Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 9:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 9 எரேமியா 9:1

எரேமியா 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.

Tamil Indian Revised Version
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் மக்களாகிய மகள் கொலைசெய்யப்பட கொடுத்தவர்களுக்காக நான் இரவும்பகலும் அழுவேன்.

Tamil Easy Reading Version
எனது தலை தண்ணீரால் நிறைக்கப்பட்டால், எனது கண்கள் கண்ணீரின் ஊற்றாக இருந்தால் நான் இரவும் பகலும், அழிந்துப்போன எனது ஜனங்களுக்காக அழ முடியும்!

திருவிவிலியம்
⁽என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும்␢ என் கண்கள் கண்ணீரின்␢ ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா?␢ அப்படியானால், என் மகளாம்␢ மக்களுள் கொலையுண்டோருக்காக␢ இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே!⁾

Jeremiah 9Jeremiah 9:2

King James Version (KJV)
Oh that my head were waters, and mine eyes a fountain of tears, that I might weep day and night for the slain of the daughter of my people!

American Standard Version (ASV)
Oh that my head were waters, and mine eyes a fountain of tears, that I might weep day and night for the slain of the daughter of my people!

Bible in Basic English (BBE)
If only my head was a stream of waters and my eyes fountains of weeping, so that I might go on weeping day and night for the dead of the daughter of my people!

Darby English Bible (DBY)
Oh that my head were waters, and mine eye a fountain of tears, that I might weep day and night for the slain of the daughter of my people!

World English Bible (WEB)
Oh that my head were waters, and my eyes a spring of tears, that I might weep day and night for the slain of the daughter of my people!

Young’s Literal Translation (YLT)
Who doth make my head waters, And mine eye a fountain of tears? And I weep by day and by night, For the wounded of the daughter of my people.

எரேமியா Jeremiah 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
Oh that my head were waters, and mine eyes a fountain of tears, that I might weep day and night for the slain of the daughter of my people!

מִֽיmee
יִתֵּ֤ןyittēnyee-TANE
רֹאשִׁי֙rōʾšiyroh-SHEE
מַ֔יִםmayimMA-yeem
וְעֵינִ֖יwĕʿênîveh-ay-NEE
מְק֣וֹרmĕqôrmeh-KORE
דִּמְעָ֑הdimʿâdeem-AH
וְאֶבְכֶּה֙wĕʾebkehveh-ev-KEH
יוֹמָ֣םyômāmyoh-MAHM
וָלַ֔יְלָהwālaylâva-LA-la
אֵ֖תʾētate
חַֽלְלֵ֥יḥallêhahl-LAY
בַתbatvaht
עַמִּֽי׃ʿammîah-MEE

இணை வசனம்

Jeremiah 13:17
நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண்மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.

Isaiah 22:4
ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.

Lamentations 2:11
என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.

Jeremiah 8:21
என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.

Jeremiah 6:26
என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.

Ezekiel 21:6
ஆதலால் மனுபுத்திரனே, உன் இடுப்பு நொறுங்கும்படி பெருமூச்சுவிடு; அவர்கள் கண்களுக்கு முன்பாக மனங்கசந்து பெருமூச்சுவிடு.

Lamentations 3:48
என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.

Lamentations 2:18
அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே.

Jeremiah 14:17
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.

Jeremiah 4:19
என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.

Isaiah 16:9
ஆகையால் யாசேருக்காக அழுததுபோலே, சிப்மாஊர்த் திராட்சச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலேயே உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று.

Psalm 119:136
உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.

Psalm 42:3
உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.


Tags என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும் அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்
எரேமியா 9:1 Concordance எரேமியா 9:1 Interlinear எரேமியா 9:1 Image