Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 28:63

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 28 உபாகமம் 28:63

உபாகமம் 28:63
கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யுமளவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள் மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப்போடப்படுவீர்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகச்செய்யவும் எப்படி உங்கள்மேல் விருப்பமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் விருப்பமாயிருப்பார்; நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.

Tamil Easy Reading Version
“கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பதிலும் உனது நாட்டை வளர்ச்சி அடைய செய்வதிலும் மகிழ்ந்தார். அதே வழியில் உன்னை அழிப்பதிலும் அதம்பண்ணுவதிலும் மகிழ்ச்சியடைவார். நீ அந்த நாட்டை உனக்குச் சொந்தமானதாக ஆக்கப்போகிறாய், ஆனால் ஜனங்கள் அந்த நாட்டைவிட்டு உன்னை அப்புறப்படுத்துவார்கள்.

திருவிவிலியம்
உங்களுக்கு நன்மைகள் செய்து உங்களைப் பெருகச் செய்வதில் மகிழ்ந்த ஆண்டவர், உங்கள்மேல் அழிவைக் கொணர்ந்து உங்களை வேரறுப்பதில் மகிழ்வார். நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிலிருந்து நீங்கள் பிடுங்கி எறியப்படுவீர்கள்.⒫

Deuteronomy 28:62Deuteronomy 28Deuteronomy 28:64

King James Version (KJV)
And it shall come to pass, that as the LORD rejoiced over you to do you good, and to multiply you; so the LORD will rejoice over you to destroy you, and to bring you to nought; and ye shall be plucked from off the land whither thou goest to possess it.

American Standard Version (ASV)
And it shall come to pass, that, as Jehovah rejoiced over you to do you good, and to multiply you, so Jehovah will rejoice over you to cause you to perish, and to destroy you; and ye shall be plucked from off the land whither thou goest in to possess it.

Bible in Basic English (BBE)
And as the Lord took delight in doing you good and increasing you, so the Lord will take pleasure in cutting you off and causing your destruction, and you will be uprooted from the land which you are about to take as your heritage.

Darby English Bible (DBY)
And it shall come to pass, that as Jehovah rejoiced over you to do you good and to multiply you, so Jehovah will rejoice over you to cause you to perish, and to destroy you; and ye shall be plucked from off the land whereunto thou goest to possess it.

Webster’s Bible (WBT)
And it shall come to pass, that as the LORD rejoiced over you to do you good, and to multiply you; so the LORD will rejoice over you to destroy you, and to bring you to naught; and ye shall be plucked from off the land whither thou goest to possess it.

World English Bible (WEB)
It shall happen that as Yahweh rejoiced over you to do you good, and to multiply you, so Yahweh will rejoice over you to cause you to perish, and to destroy you; and you shall be plucked from off the land where you go in to possess it.

Young’s Literal Translation (YLT)
`And it hath been, as Jehovah hath rejoiced over you to do you good, and to multiply you, so doth Jehovah rejoice over you to destroy you, and to lay you waste; and ye have been pulled away from off the ground whither thou art going in to possess it;

உபாகமம் Deuteronomy 28:63
கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யுமளவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள் மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப்போடப்படுவீர்கள்.
And it shall come to pass, that as the LORD rejoiced over you to do you good, and to multiply you; so the LORD will rejoice over you to destroy you, and to bring you to nought; and ye shall be plucked from off the land whither thou goest to possess it.

וְ֠הָיָהwĕhāyâVEH-ha-ya
כַּֽאֲשֶׁרkaʾăšerKA-uh-sher
שָׂ֨שׂśāśsahs
יְהוָ֜הyĕhwâyeh-VA
עֲלֵיכֶ֗םʿălêkemuh-lay-HEM
לְהֵיטִ֣יבlĕhêṭîbleh-hay-TEEV
אֶתְכֶם֮ʾetkemet-HEM
וּלְהַרְבּ֣וֹתûlĕharbôtoo-leh-hahr-BOTE
אֶתְכֶם֒ʾetkemet-HEM
כֵּ֣ןkēnkane
יָשִׂ֤ישׂyāśîśya-SEES
יְהוָה֙yĕhwāhyeh-VA
עֲלֵיכֶ֔םʿălêkemuh-lay-HEM
לְהַֽאֲבִ֥ידlĕhaʾăbîdleh-ha-uh-VEED
אֶתְכֶ֖םʾetkemet-HEM
וּלְהַשְׁמִ֣ידûlĕhašmîdoo-leh-hahsh-MEED
אֶתְכֶ֑םʾetkemet-HEM
וְנִסַּחְתֶּם֙wĕnissaḥtemveh-nee-sahk-TEM
מֵעַ֣לmēʿalmay-AL
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
אֲשֶׁרʾăšeruh-SHER
אַתָּ֥הʾattâah-TA
בָאbāʾva
שָׁ֖מָּהšāmmâSHA-ma
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA

இணை வசனம்

Jeremiah 32:41
அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.

Proverbs 1:26
ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.

Deuteronomy 30:9
அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.

Isaiah 1:24
ஆகையால் சேனையின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: ஓகோ நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன்.

Ezekiel 5:13
இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களில் நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள்.

Zephaniah 3:17
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.

Luke 15:32
உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.

Luke 15:23
கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.

Luke 15:6
வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

Micah 7:18
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.

Daniel 7:8
அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தினகொம்புகளில் மூன்றுபிடுங்கப்படது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷகண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவகளைப் பேசும் வாயும் இருந்தது.

Ezekiel 33:11
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.

Isaiah 62:5
வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

Jeremiah 12:14
இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.

Jeremiah 18:7
பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,

Jeremiah 24:6
அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன்.

Jeremiah 31:28
அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள்பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள் பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 31:40
பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.

Jeremiah 42:10
நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன்.

Jeremiah 45:4
இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழுத்தேசத்துக்கும் இப்படியே நடக்கும்.

Deuteronomy 7:22
அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.


Tags கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யுமளவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள் மேல் இரம்மியமாயிருந்தாரோ அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார் நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப்போடப்படுவீர்கள்
உபாகமம் 28:63 Concordance உபாகமம் 28:63 Interlinear உபாகமம் 28:63 Image