யாத்திராகமம் 10:9
அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு மோசே: எங்களுடைய வாலிபர்களோடும், எங்களுடைய முதியோர்களோடும், எங்களுடைய மகன்களோடும், எங்களுடைய மகள்களோடும், எங்களுடைய ஆடுகளையும், எங்களுடைய மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.
Tamil Easy Reading Version
மோசே பதிலாக, “இளைஞரும், முதியோருமாகிய எல்லா ஜனங்களும் போவோம். எங்களோடு எங்கள் மகன்களையும், மகள்களையும், ஆடுகளையும், மாடுகளையும், அழைத்துச் செல்வோம். கர்த்தரின் பண்டிகை எங்கள் எல்லோருக்கும் உரியது என்பதால் நாங்கள் எல்லோரும் போவோம்” என்று கூறினான்.
திருவிவிலியம்
அதற்கு மோசே, “எங்களிடையேயுள்ள இளைஞரோடும் முதியவரோடும் நாங்கள் போவோம். எங்கள் புதல்வரோடும் புதல்வியரோடும், எங்கள் ஆட்டுமந்தையோடும் எங்கள் மாட்டு மந்தையோடும் நாங்கள் போவோம். ஏனெனில், இது எங்களுக்கு ‘ஆண்டவரின் திருவிழா’ ஆகும்” என்றார்.
King James Version (KJV)
And Moses said, We will go with our young and with our old, with our sons and with our daughters, with our flocks and with our herds will we go; for we must hold a feast unto the LORD.
American Standard Version (ASV)
And Moses said, We will go with our young and with our old; with our sons and with our daughters, with our flocks and with our herds will we go; for we must hold a feast unto Jehovah.
Bible in Basic English (BBE)
And Moses said, We will go with our young and our old, with our sons and our daughters, with our flocks and our herds; for we are to keep a feast to the Lord.
Darby English Bible (DBY)
And Moses said, We will go with our young and with our old, with our sons and with our daughters; with our flocks and with our herds will we go; for we have a feast of Jehovah.
Webster’s Bible (WBT)
And Moses said, We will go with our young and with our old, with our sons and with our daughters, with our flocks and with our herds will we go; for we must hold a feast to the LORD.
World English Bible (WEB)
Moses said, “We will go with our young and with our old; with our sons and with our daughters, with our flocks and with our herds will we go; for we must hold a feast to Yahweh.”
Young’s Literal Translation (YLT)
And Moses saith, `With our young ones, and with our aged ones, we go, with our sons, and with our daughters, with our flock, and our herd, we go, for we have a festival to Jehovah.’
யாத்திராகமம் Exodus 10:9
அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.
And Moses said, We will go with our young and with our old, with our sons and with our daughters, with our flocks and with our herds will we go; for we must hold a feast unto the LORD.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH | |
| בִּנְעָרֵ֥ינוּ | binʿārênû | been-ah-RAY-noo | |
| וּבִזְקֵנֵ֖ינוּ | ûbizqēnênû | oo-veez-kay-NAY-noo | |
| נֵלֵ֑ךְ | nēlēk | nay-LAKE | |
| בְּבָנֵ֨ינוּ | bĕbānênû | beh-va-NAY-noo | |
| וּבִבְנוֹתֵ֜נוּ | ûbibnôtēnû | oo-veev-noh-TAY-noo | |
| בְּצֹאנֵ֤נוּ | bĕṣōʾnēnû | beh-tsoh-NAY-noo | |
| וּבִבְקָרֵ֙נוּ֙ | ûbibqārēnû | oo-veev-ka-RAY-NOO | |
| נֵלֵ֔ךְ | nēlēk | nay-LAKE | |
| כִּ֥י | kî | kee | |
| חַג | ḥag | hahɡ | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| לָֽנוּ׃ | lānû | la-NOO |
இணை வசனம்
Exodus 5:1
பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.
Exodus 3:18
அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
Ephesians 6:4
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
1 Corinthians 5:7
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
Ecclesiastes 12:1
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,
Proverbs 3:9
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
Psalm 148:12
வாலிபரே கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
Joshua 24:15
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
Deuteronomy 31:12
புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படி யெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்,
Numbers 29:12
ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழுநாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.
Exodus 13:6
புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக.
Exodus 8:25
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.
Exodus 5:3
அப்பொழுது அவர்கள்: எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் கொள்ளை நோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்றார்கள்.
Genesis 50:8
யோசேப்பின் வீட்டார் யாவரும், அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டில் விட்டுப் போனார்கள்.
Tags அதற்கு மோசே எங்கள் இளைஞரோடும் எங்கள் முதியோரோடும் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம் நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்
யாத்திராகமம் 10:9 Concordance யாத்திராகமம் 10:9 Interlinear யாத்திராகமம் 10:9 Image