Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 14:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 14 ஏசாயா 14:6

ஏசாயா 14:6
உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.

Tamil Indian Revised Version
மிகுந்த கோபங்கொண்டு ஓய்வில்லாமல் மக்களை அடித்து, கோபமாக மக்களை அரசாண்டவன், தடுக்க யாருமில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.

Tamil Easy Reading Version
கோபத்தில் பாபிலோனிய அரசன் ஜனங்களை அடித்தான். ஜனங்களை அடிப்பதை அவன் ஒருபோதும் நிறுத்தவில்லை. அத்தீய அரசன் ஜனங்களைக் கோபத்துடன் ஆண்டான். அவன் எப்பொழுதும் ஜனங்களைத் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை.

திருவிவிலியம்
⁽அவர்கள் கோபத்தால் வெகுண்டு␢ அடிமேல் அடியாக மக்களினங்களை␢ அடித்து நொறுக்கினார்கள்;␢ பிற நாட்டினரைத் தொடர்ந்து␢ கொடுமைப்படுத்திக்␢ கடுமையாய் ஆண்டார்கள்.⁾

Isaiah 14:5Isaiah 14Isaiah 14:7

King James Version (KJV)
He who smote the people in wrath with a continual stroke, he that ruled the nations in anger, is persecuted, and none hindereth.

American Standard Version (ASV)
that smote the peoples in wrath with a continual stroke, that ruled the nations in anger, with a persecution that none restrained.

Bible in Basic English (BBE)
He whose rod was on the peoples with an unending wrath, ruling the nations in passion, with an uncontrolled rule.

Darby English Bible (DBY)
He that smote the peoples in wrath with a relentless stroke, he that ruled the nations in anger, is persecuted unsparingly.

World English Bible (WEB)
who struck the peoples in wrath with a continual stroke, who ruled the nations in anger, with a persecution that none restrained.

Young’s Literal Translation (YLT)
He who is smiting peoples in wrath, A smiting without intermission, He who is ruling in anger nations, Pursuing without restraint!

ஏசாயா Isaiah 14:6
உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.
He who smote the people in wrath with a continual stroke, he that ruled the nations in anger, is persecuted, and none hindereth.

מַכֶּ֤הmakkema-KEH
עַמִּים֙ʿammîmah-MEEM
בְּעֶבְרָ֔הbĕʿebrâbeh-ev-RA
מַכַּ֖תmakkatma-KAHT
בִּלְתִּ֣יbiltîbeel-TEE
סָרָ֑הsārâsa-RA
רֹדֶ֤הrōderoh-DEH
בָאַף֙bāʾapva-AF
גּוֹיִ֔םgôyimɡoh-YEEM
מֻרְדָּ֖ףmurdāpmoor-DAHF
בְּלִ֥יbĕlîbeh-LEE
חָשָֽׂךְ׃ḥāśākha-SAHK

இணை வசனம்

2 Chronicles 36:17
ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

Revelation 17:16
நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப்பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.

James 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

Daniel 7:19
அப்பொழுது மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய், இருப்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக் குறித்தும்,

Daniel 4:35
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

Jeremiah 50:31
இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.

Jeremiah 25:26
வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின்மீதிலுள்ள சகலதேசத்து ராஜாக்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான் என்றார்.

Jeremiah 25:9
இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

Isaiah 47:1
பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.

Isaiah 46:10
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

Isaiah 33:1
கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்ணுகிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள்.

Isaiah 21:1
கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல்காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்துவருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது.

Isaiah 13:14
துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப் போக முகத்தைத் திருப்பி, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.

Isaiah 10:14
ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.

Proverbs 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.

Job 9:13
தேவன் தம்முடைய கோபத்தைத் திருப்பமாட்டார்; ஒருவருக்கொருவர் துணை நிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும்.

Revelation 18:8
ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.


Tags உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன் தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்
ஏசாயா 14:6 Concordance ஏசாயா 14:6 Interlinear ஏசாயா 14:6 Image