Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 13:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 13 உபாகமம் 13:6

உபாகமம் 13:6
உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும் உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
உன் தாய்க்குப் பிறந்த உன்னுடைய சகோதரனாகிலும், உன்னுடைய மகனாகிலும், மகளாகிலும், உன் மனைவியாகிலும், உன் உயிரைப்போலிருக்கிற உன்னுடைய நண்பனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தெய்வங்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
“யாராவது ஒருவன், அது உங்கள் உடன் பிறந்த சகோதரன், உங்கள் மகன், உங்கள் மகள், நீங்கள் நேசிக்கின்ற உங்கள் மனைவி அல்லது உங்கள் உயிர் நண்பன், இவர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுள் ஒருவர் உங்களிடம் வந்து, ‘நாம் போய் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யலாம்’ என்று அந்நிய தெய்வங்களை நீங்கள் வழிபட இரகசியமாக கூறலாம். (இந்தத் தெய்வங்கள் உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் தெரியவே தெரியாது.

திருவிவிலியம்
உன்தாயின் மகனாகிய உன் சகோதரன், உன் மகன், மகள், அன்பு மனைவி, ஆருயிர் நண்பன் ஆகியோருள் எவராவது, நீயும் உன் மூதாதையரும் அறிந்திராத வேற்றுத் தெய்வங்களிடம் சென்று அவற்றுக்கு ஊழியம் செய்வோம், என்று இரகசியமாக, நயவஞ்சகமாகக் கூறலாம்.

Deuteronomy 13:5Deuteronomy 13Deuteronomy 13:7

King James Version (KJV)
If thy brother, the son of thy mother, or thy son, or thy daughter, or the wife of thy bosom, or thy friend, which is as thine own soul, entice thee secretly, saying, Let us go and serve other gods, which thou hast not known, thou, nor thy fathers;

American Standard Version (ASV)
If thy brother, the son of thy mother, or thy son, or thy daughter, or the wife of thy bosom, or thy friend, that is as thine own soul, entice thee secretly, saying, Let us go and serve other gods, which thou hast not known, thou, nor thy fathers;

Bible in Basic English (BBE)
If your brother, the son of your mother, or your son or your daughter or the wife of your heart, or the friend who is as dear to you as your life, working on you secretly says to you, Let us go and give worship to other gods, strange to you and to your fathers;

Darby English Bible (DBY)
If thy brother, the son of thy mother, or thy son, or thy daughter, or the wife of thy bosom, or thy friend, who is to thee as thy soul, entice thee secretly, saying, Let us go and serve other gods (whom thou hast not known, thou, nor thy fathers;

Webster’s Bible (WBT)
If thy brother, the son of thy mother, or thy son, or thy daughter, or the wife of thy bosom, or thy friend, who is as thy own soul, shall entice thee secretly, saying, Let us go and serve other gods, which thou hast not known, thou, nor thy fathers;

World English Bible (WEB)
If your brother, the son of your mother, or your son, or your daughter, or the wife of your bosom, or your friend, who is as your own soul, entice you secretly, saying, Let us go and serve other gods, which you have not known, you, nor your fathers;

Young’s Literal Translation (YLT)
`When thy brother — son of thy mother, or thy son, or thy daughter, or the wife of thy bosom, or thy friend who `is’ as thine own soul — doth move thee, in secret, saying, Let us go and serve other gods — (which thou hast not known, thou and thy fathers,

உபாகமம் Deuteronomy 13:6
உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும் உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,
If thy brother, the son of thy mother, or thy son, or thy daughter, or the wife of thy bosom, or thy friend, which is as thine own soul, entice thee secretly, saying, Let us go and serve other gods, which thou hast not known, thou, nor thy fathers;

כִּ֣יkee
יְסִֽיתְךָ֡yĕsîtĕkāyeh-see-teh-HA
אָחִ֣יךָʾāḥîkāah-HEE-ha
בֶןbenven
אִ֠מֶּךָʾimmekāEE-meh-ha
אֽוֹʾôoh
בִנְךָ֙binkāveen-HA
אֽוֹʾôoh
בִתְּךָ֜bittĕkāvee-teh-HA
א֣וֹ׀ʾôoh
אֵ֣שֶׁתʾēšetA-shet
חֵיקֶ֗ךָḥêqekāhay-KEH-ha
א֧וֹʾôoh
רֵֽעֲךָ֛rēʿăkāray-uh-HA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
כְּנַפְשְׁךָ֖kĕnapšĕkākeh-nahf-sheh-HA
בַּסֵּ֣תֶרbassēterba-SAY-ter
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
נֵֽלְכָ֗הnēlĕkânay-leh-HA
וְנַֽעַבְדָה֙wĕnaʿabdāhveh-na-av-DA
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
לֹ֣אlōʾloh
יָדַ֔עְתָּyādaʿtāya-DA-ta
אַתָּ֖הʾattâah-TA
וַֽאֲבֹתֶֽיךָ׃waʾăbōtêkāVA-uh-voh-TAY-ha

இணை வசனம்

1 Samuel 20:17
யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.

1 Samuel 18:3
யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.

1 Samuel 18:1
அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.

Deuteronomy 28:54
உன் சத்துருக்கள் உன் வாசல்களிலும் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையிலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,

Deuteronomy 17:2
உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,

Galatians 2:4
கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாரணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.

Ephesians 4:14
நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,

Colossians 2:4
ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

2 Peter 2:1
கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

1 John 2:26
உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

Revelation 12:9
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.

Revelation 13:14
மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.

Revelation 20:3
அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.

2 Corinthians 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

Matthew 12:48
தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,

Deuteronomy 29:18
ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.

Deuteronomy 32:16
அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.

Judges 2:13
அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.

Judges 5:8
நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம் பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?

Judges 10:6
இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.

2 Samuel 1:26
என் சகோதாரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.

1 Kings 11:5
சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.

2 Kings 17:30
பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும்,

Job 31:27
என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால்,

Proverbs 5:20
என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?

Proverbs 18:24
சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.

Micah 7:5
சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.

Genesis 16:5
அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.


Tags உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும் உன் குமாரனாகிலும் உன் குமாரத்தியாகிலும் உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும் உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி
உபாகமம் 13:6 Concordance உபாகமம் 13:6 Interlinear உபாகமம் 13:6 Image