Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 41:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 41 ஏசாயா 41:4

ஏசாயா 41:4
அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்ட தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.

Tamil Indian Revised Version
அதைச்செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களுடனும் இருப்பவராகிய நான்தானே.

Tamil Easy Reading Version
இவை நிகழக்காரணமாக இருந்தது யார்?இதனைச் செய்தது யார்? தொடக்கத்திலிருந்து அனைத்து ஜனங்களையும் அழைத்தது யார்? கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன். கர்த்தராகிய நானே முதல்வர்! தொடக்கத்திற்கு முன்னரே நான் இங்கே இருந்தேன். எல்லாம் முடியும் போதும் நான் இங்கே இருப்பேன்.

திருவிவிலியம்
⁽இவற்றைச்செய்து முடித்தவர் யார்?␢ தொடக்கத்திலிருந்தே␢ தலைமுறைகளை அழைத்தவரன்றோ!␢ ஆண்டவராகிய நானே முதலானவர்!␢ முடிவானவற்றுடன்␢ இருக்கப் போவதும் நானே!⁾

Isaiah 41:3Isaiah 41Isaiah 41:5

King James Version (KJV)
Who hath wrought and done it, calling the generations from the beginning? I the LORD, the first, and with the last; I am he.

American Standard Version (ASV)
Who hath wrought and done it, calling the generations from the beginning? I, Jehovah, the first, and with the last, I am he.

Bible in Basic English (BBE)
Whose purpose and work was it? His who sent out the generations from the start. I the Lord, the first, and with the last, I am he.

Darby English Bible (DBY)
Who hath wrought and done [it], calling the generations from the beginning? I, Jehovah, the first; and with the last, I [am] HE.

World English Bible (WEB)
Who has worked and done it, calling the generations from the beginning? I, Yahweh, the first, and with the last, I am he.

Young’s Literal Translation (YLT)
Who hath wrought and done, Calling the generations from the first? I, Jehovah, the first, and with the last I `am’ He.

ஏசாயா Isaiah 41:4
அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்ட தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.
Who hath wrought and done it, calling the generations from the beginning? I the LORD, the first, and with the last; I am he.

מִֽיmee
פָעַ֣לpāʿalfa-AL
וְעָשָׂ֔הwĕʿāśâveh-ah-SA
קֹרֵ֥אqōrēʾkoh-RAY
הַדֹּר֖וֹתhaddōrôtha-doh-ROTE
מֵרֹ֑אשׁmērōšmay-ROHSH
אֲנִ֤יʾănîuh-NEE
יְהוָה֙yĕhwāhyeh-VA
רִאשׁ֔וֹןriʾšônree-SHONE
וְאֶתwĕʾetveh-ET
אַחֲרֹנִ֖יםʾaḥărōnîmah-huh-roh-NEEM
אֲנִיʾănîuh-NEE
הֽוּא׃hûʾhoo

இணை வசனம்

Revelation 22:13
நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

Revelation 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

Isaiah 48:12
யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும் நான் பிந்தினவருமாமே.

Isaiah 46:10
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

Isaiah 41:26
நாம் அதை அறியும்படியாக ஆதியில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே.

Isaiah 43:10
நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

Revelation 1:8
இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

Isaiah 44:6
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.

Deuteronomy 32:7
பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.

Revelation 2:8
சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;

Revelation 1:11
அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.

Isaiah 40:26
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

Isaiah 42:24
யாக்கோபைச் சிறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவஞ்செய்து விரோதித்த கர்த்தர் அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே.

Isaiah 46:3
யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்,

Isaiah 48:3
பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.

Matthew 1:23
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

Matthew 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

Acts 15:18
உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.

Acts 17:26
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

Isaiah 40:12
தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?


Tags அதைச் செய்து நிறைவேற்றி ஆதிமுதற்கொண்ட தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார் முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே
ஏசாயா 41:4 Concordance ஏசாயா 41:4 Interlinear ஏசாயா 41:4 Image