1 நாளாகமம் 12:17
தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களுக்கு உத்தரவுகொடுத்து: நீங்கள் எனக்கு உதவிசெய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால், என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும்; என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க, என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
Tamil Indian Revised Version
தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களை சந்தித்து: நீங்கள் எனக்கு உதவி செய்ய சமாதானமாக என்னிடம் வந்தீர்களானால், என்னுடைய இருதயம் உங்களோடு இணைந்திருக்கும்; என்னுடைய கைகளில் கொடுமை இல்லாமலிருக்க, என்னை என்னுடைய எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களென்றால், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
Tamil Easy Reading Version
தாவீது அவர்களைச் சந்திக்க வெளியே வந்தான். தாவீது அவர்களிடம், “எனக்கு உதவும் எண்ணத்தோடு சமாதானமாய் வந்தால், உங்களை வரவேற்கிறேன். என்னோடு சேர்ந்துக்கொள்ளுங்கள். அவ்வாறில்லாமல் நான் ஒரு தவறும் செய்யாமல் இருக்கும்போது, என்னைக் கவனித்து எதிரிகளிடம் காட்டிக்கொடுக்க நீங்கள் வந்திருந்தால், நம் முற்பிதாக்களின் தேவன் உங்கள் தீய காரியங்களைக் கவனித்து அதற்குரிய தண்டனையைக் கொடுப்பார்” என்றான்.
திருவிவிலியம்
தாவீது அவர்களைச் சந்திக்க வெளியே வந்து அவர்களை நோக்கி; “நீங்கள் சமாதான நோக்குடன் எனக்கு உதவி செய்ய வந்துள்ளீர்களென்றால், நான் உங்களை இதயப் பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். மாறாக, குற்றமற்றவனான என்னை என் எதிரிகள் கையில் ஒப்புவிக்கும் பொருட்டு வந்துள்ளீர்களென்றால் நம் முன்னோரின் கடவுள் அதைக் கண்டு தீர்ப்புக் கூறட்டும்” என்றார்.⒫
King James Version (KJV)
And David went out to meet them, and answered and said unto them, If ye be come peaceably unto me to help me, mine heart shall be knit unto you: but if ye be come to betray me to mine enemies, seeing there is no wrong in mine hands, the God of our fathers look thereon, and rebuke it.
American Standard Version (ASV)
And David went out to meet them, and answered and said unto them, If ye be come peaceably unto me to help me, my heart shall be knit unto you; but if `ye be come’ to betray me to mine adversaries, seeing there is no wrong in my hands, the God of our fathers look thereon, and rebuke it.
Bible in Basic English (BBE)
And David went out to them, and said to them, If you have come in peace to give me help, my heart will be united with yours; but if you have come to give me up to those who would take my life, though my hands are clean from wrongdoing, then may the God of our fathers see it and give you punishment.
Darby English Bible (DBY)
And David went out to meet them, and answered and said to them, If ye come peaceably to me to help me, my heart shall be knit unto you; but if to betray me to mine enemies, seeing there is no wrong in my hands, the God of our fathers see [it] and rebuke [it].
Webster’s Bible (WBT)
And David went out to meet them, and answered and said to them, If ye have come peaceably to me to help me, my heart shall be knit to you: but if ye have come to betray me to my enemies, seeing there is no wrong in my hands, the God of our fathers look on it, and rebuke it.
World English Bible (WEB)
David went out to meet them, and answered them, If you be come peaceably to me to help me, my heart shall be knit to you; but if [you be come] to betray me to my adversaries, seeing there is no wrong in my hands, the God of our fathers look thereon, and rebuke it.
Young’s Literal Translation (YLT)
and David goeth out before them, and answereth and saith to them, `If for peace ye have come in unto me, to help me, I have a heart to unite with you; and if to betray me to mine adversaries — without violence in my hands — the God of our fathers doth see and reprove.’
1 நாளாகமம் 1 Chronicles 12:17
தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களுக்கு உத்தரவுகொடுத்து: நீங்கள் எனக்கு உதவிசெய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால், என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும்; என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க, என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
And David went out to meet them, and answered and said unto them, If ye be come peaceably unto me to help me, mine heart shall be knit unto you: but if ye be come to betray me to mine enemies, seeing there is no wrong in mine hands, the God of our fathers look thereon, and rebuke it.
| וַיֵּצֵ֣א | wayyēṣēʾ | va-yay-TSAY | |
| דָוִיד֮ | dāwîd | da-VEED | |
| לִפְנֵיהֶם֒ | lipnêhem | leef-nay-HEM | |
| וַיַּ֙עַן֙ | wayyaʿan | va-YA-AN | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| לָהֶ֔ם | lāhem | la-HEM | |
| אִם | ʾim | eem | |
| לְשָׁל֞וֹם | lĕšālôm | leh-sha-LOME | |
| בָּאתֶ֤ם | bāʾtem | ba-TEM | |
| אֵלַי֙ | ʾēlay | ay-LA | |
| לְעָזְרֵ֔נִי | lĕʿozrēnî | leh-oze-RAY-nee | |
| יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh | |
| לִּ֧י | lî | lee | |
| עֲלֵיכֶ֛ם | ʿălêkem | uh-lay-HEM | |
| לֵבָ֖ב | lēbāb | lay-VAHV | |
| לְיָ֑חַד | lĕyāḥad | leh-YA-hahd | |
| וְאִֽם | wĕʾim | veh-EEM | |
| לְרַמּוֹתַ֣נִי | lĕrammôtanî | leh-ra-moh-TA-nee | |
| לְצָרַ֗י | lĕṣāray | leh-tsa-RAI | |
| בְּלֹ֤א | bĕlōʾ | beh-LOH | |
| חָמָס֙ | ḥāmās | ha-MAHS | |
| בְּכַפַּ֔י | bĕkappay | beh-ha-PAI | |
| יֵ֛רֶא | yēreʾ | YAY-reh | |
| אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| אֲבוֹתֵ֖ינוּ | ʾăbôtênû | uh-voh-TAY-noo | |
| וְיוֹכַֽח׃ | wĕyôkaḥ | veh-yoh-HAHK |
இணை வசனம்
Genesis 31:42
என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.
Psalm 12:1
இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.
Psalm 86:11
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
Jeremiah 32:39
அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
Zechariah 3:2
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.
Acts 4:32
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
1 Corinthians 1:10
சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
2 Corinthians 13:11
கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.
Philippians 1:27
நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.
1 Peter 2:23
அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
Psalm 7:6
கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
2 Kings 10:15
அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்ட போது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச் சொல்லி,
Genesis 31:53
ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.
1 Samuel 16:4
கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.
1 Samuel 18:1
அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.
1 Samuel 18:3
யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.
1 Samuel 24:11
என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
1 Samuel 26:23
கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப்பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என்கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.
2 Samuel 3:20
அப்னேரும் அவனோடேகூட இருபது; பேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்.
1 Kings 2:13
ஆகித்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த் தான் வருகிறேன் என்றான்.
2 Kings 9:22
யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்.
Jude 1:9
பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்.
Tags தாவீது புறப்பட்டு அவர்களுக்கு எதிர்கொண்டுபோய் அவர்களுக்கு உத்தரவுகொடுத்து நீங்கள் எனக்கு உதவிசெய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால் என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும் என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில் நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்
1 நாளாகமம் 12:17 Concordance 1 நாளாகமம் 12:17 Interlinear 1 நாளாகமம் 12:17 Image