யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.
மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,
அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.
ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,
யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும் அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,
பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.
அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.
இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.
with And he | וַיִּשְׁלַ֨ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
sent the | סְפָרִ֜ים | sĕpārîm | seh-fa-REEM |
letters | אֶל | ʾel | el |
unto | כָּל | kāl | kahl |
all the | הַיְּהוּדִ֗ים | hayyĕhûdîm | ha-yeh-hoo-DEEM |
Jews, | אֶל | ʾel | el |
to seven | שֶׁ֨בַע | šebaʿ | SHEH-va |
and | וְעֶשְׂרִ֤ים | wĕʿeśrîm | veh-es-REEM |
twenty hundred | וּמֵאָה֙ | ûmēʾāh | oo-may-AH |
the | מְדִינָ֔ה | mĕdînâ | meh-dee-NA |
provinces of the | מַלְכ֖וּת | malkût | mahl-HOOT |
kingdom Ahasuerus, | אֲחַשְׁוֵר֑וֹשׁ | ʾăḥašwērôš | uh-hahsh-vay-ROHSH |
of words | דִּבְרֵ֥י | dibrê | deev-RAY |
of peace | שָׁל֖וֹם | šālôm | sha-LOME |
and truth, | וֶֽאֱמֶֽת׃ | weʾĕmet | VEH-ay-MET |