சேனீரிலிருந்து வந்த தேவதாரு மரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
கேபாரின் முதியோரும் அதின் சாஸ்திரிகளும் உன்னில் கம்பத்துப்பார்க்கிறவர்களாயிருந்தார்கள்; சமுத்திரத்தின் சகல கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரரும் உன்னோடே தொழில்துறை வியாபாரம் பண்ணுகிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
யாவன், தூபால், மேசேக் என்னும் ஜாதியார் உன் வியாபாரிகளாயிருந்து மனுஷர்களையும் வெண்கலப்பாத்திரங்களையும் உன் தொழில்துறைக் கொண்டுவந்தார்கள்.
தொகர்மா வம்சத்தார் குதிரைகளையும் குதிரைவீரரையும் கோவேறுகழுதைகளையும் உன் சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
சீரியர் உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தம் உன்னோடே வியாபாரம்பண்ணி, மரகதங்களையும், இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையாலாடைகளையும், உயர்ந்த வஸ்திரங்களையும், பவளங்களையும், பளிங்கையும் உன் சந்தைகளில் விற்கவந்தார்கள்.
யூதரும் இஸ்ரவேல் தேசத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணி, மின்னீத் பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
தமஸ்கு உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தமும், சகலவிதப் பொருள்களின் திரட்சியினிமித்தமும் உன்னோடே வர்த்தகம்பண்ணி, கல்போனின் திராட்சரசத்தையும் வெண்மையான ஆட்டுமயிரையும் உனக்கு விற்றார்கள்.
சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னோடே வர்த்தகம்பண்ணி, மேல்தரமான சகலவித சம்பாரங்களையும், சகலவித இரத்தினக்கற்களையும் பொன்னையும் உன் சந்தைகளில் கொண்டுவந்தார்கள்.
| Tarshish | תַּרְשִׁ֥ישׁ | taršîš | tahr-SHEESH |
| was thy merchant | סֹחַרְתֵּ֖ךְ | sōḥartēk | soh-hahr-TAKE |
| by reason of the multitude | מֵרֹ֣ב | mērōb | may-ROVE |
| of all | כָּל | kāl | kahl |
| kind of riches; | ה֑וֹן | hôn | hone |
| with silver, | בְּכֶ֤סֶף | bĕkesep | beh-HEH-sef |
| iron, | בַּרְזֶל֙ | barzel | bahr-ZEL |
| tin, | בְּדִ֣יל | bĕdîl | beh-DEEL |
| and lead, | וְעוֹפֶ֔רֶת | wĕʿôperet | veh-oh-FEH-ret |
| they traded | נָתְנ֖וּ | notnû | note-NOO |
| in thy fairs. | עִזְבוֹנָֽיִךְ׃ | ʿizbônāyik | eez-voh-NA-yeek |