நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.
ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.
நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் அடுத்த யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடே சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என் கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல்.
நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,
நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்தஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்.
அப்படியே என் பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
am And ye shall | וִֽידַעְתֶּ֖ם | wîdaʿtem | vee-da-TEM |
know | כִּֽי | kî | kee |
that | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
I Lord, the | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
when I have opened | בְּפִתְחִ֣י | bĕpitḥî | beh-feet-HEE |
אֶת | ʾet | et | |
graves, your | קִבְרֽוֹתֵיכֶ֗ם | qibrôtêkem | keev-roh-tay-HEM |
up you brought | וּבְהַעֲלוֹתִ֥י | ûbĕhaʿălôtî | oo-veh-ha-uh-loh-TEE |
and out of | אֶתְכֶ֛ם | ʾetkem | et-HEM |
your | מִקִּבְרוֹתֵיכֶ֖ם | miqqibrôtêkem | mee-keev-roh-tay-HEM |
graves, people, my O | עַמִּֽי׃ | ʿammî | ah-MEE |