அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.
அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.
ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.
பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.
| And it came to pass, | וַיְהִ֣י׀ | wayhî | vai-HEE |
| as he drew back | כְּמֵשִׁ֣יב | kĕmēšîb | keh-may-SHEEV |
| his hand, | יָד֗וֹ | yādô | ya-DOH |
| that, behold, | וְהִנֵּה֙ | wĕhinnēh | veh-hee-NAY |
| his brother | יָצָ֣א | yāṣāʾ | ya-TSA |
| came out: | אָחִ֔יו | ʾāḥîw | ah-HEEOO |
| and she said, | וַתֹּ֕אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| How | מַה | ma | ma |
| hast thou broken forth? | פָּרַ֖צְתָּ | pāraṣtā | pa-RAHTS-ta |
| this breach | עָלֶ֣יךָ | ʿālêkā | ah-LAY-ha |
| be upon | פָּ֑רֶץ | pāreṣ | PA-rets |
| thee: therefore his name | וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA |
| was called | שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH |
| Pharez. | פָּֽרֶץ׃ | pāreṣ | PA-rets |