கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
எகிப்து தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்தில் உள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.
யோசேப்பு எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.
அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்.
அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று.
was there was all | וְלֶ֤חֶם | wĕleḥem | veh-LEH-hem |
bread | אֵין֙ | ʾên | ane |
And no | בְּכָל | bĕkāl | beh-HAHL |
all in | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
the | כִּֽי | kî | kee |
land; for | כָבֵ֥ד | kābēd | ha-VADE |
sore, famine | הָֽרָעָ֖ב | hārāʿāb | ha-ra-AV |
the | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
very fainted land the | וַתֵּ֜לַהּ | wattēlah | va-TAY-la |
that so | אֶ֤רֶץ | ʾereṣ | EH-rets |
of Egypt and the | מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-RA-YEEM |
land Canaan | וְאֶ֣רֶץ | wĕʾereṣ | veh-EH-rets |
of | כְּנַ֔עַן | kĕnaʿan | keh-NA-an |
by reason of | מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY |
the famine. | הָֽרָעָֽב׃ | hārāʿāb | HA-ra-AV |