மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல் அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.
கர்த்தர் என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும்போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு,
ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,
நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
it | כֹּ֚ה | kō | koh |
Thus | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
saith the | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
Lord; Take | הִשָּׁמְר֖וּ | hiššomrû | hee-shome-ROO |
heed yourselves, | בְּנַפְשֽׁוֹתֵיכֶ֑ם | bĕnapšôtêkem | beh-nahf-shoh-tay-HEM |
to no | וְאַל | wĕʾal | veh-AL |
and | תִּשְׂא֤וּ | tiśʾû | tees-OO |
bear | מַשָּׂא֙ | maśśāʾ | ma-SA |
burden day, sabbath | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
the | הַשַּׁבָּ֔ת | haššabbāt | ha-sha-BAHT |
on nor | וַהֲבֵאתֶ֖ם | wahăbēʾtem | va-huh-vay-TEM |
bring gates the by in | בְּשַׁעֲרֵ֥י | bĕšaʿărê | beh-sha-uh-RAY |
of Jerusalem; | יְרוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-roo-sha-loh-EEM |