Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆ இயேசுவே உம்மாலே

1. ஆ இயேசுவே, உம்மாலே

நான் மீட்கப்பட்டவன்;

உம் திவ்விய ரத்தத்தாலே

நான் சுத்தமானவன்;

மிகுந்த கஸ்தியாலே

என் தோஷத்தைத் தீர்த்தீர்;

உமது சாவினாலே

நீர் என்னை ரட்சித்தீர்.

2. நான் உம்மால் என்றும் வாழ,

இப்பந்தியில் நீரே

என் ஆவிக் கேற்றதான

அமிர்தம் தந்தீரே;

உம் ஆசீர்வாதம் ஈந்து,

என் பாவம் மன்னியும்;

அன்போடு என்னைச் சேர்த்து,

தயாளம் காண்பியும்.

3. நீர் இன்னும் என்னில் காணும்

பொல்லாங்கு யாவையும்

அகற்றிப்போட வாரும்,

என் நெஞ்சில் தங்கிடும்;

நான் உம்மைப் பற்றிக் கொள்ள

கருணை புரியும்;

மிகுந்த தாழ்மையுள்ள

சித்தம் கடாஷியும்.

4. நல் மீட்பரே, உம்மோடு

நான் ஐக்கியமாகவும்,

நாடோறும் வாஞ்சையோடு

உம்மில் நிலைக்கவும்,

மிகுந்த அன்பினாலே

துணை செய்தருளும்;

தெய்வீக அப்பத்தாலே

நீர் என்னைப் போஷியும்.

Aa Yesuvae, Ummaalae Lyrics in English

1. Aa Yesuvae, ummaalae
Naan meetkappattavan;
Um thivviya raththaththaalae
Naan suththamaanavan;
Mikuntha kasthiyaalae
En thoshaththaith theerththeer;
Umathu saavinaalae
Neer ennai ratchiththeer.

2. Naan ummaal entum vaala,
Ippanthiyil neerae
En aavik kaettathaana
Amirtham thantheerae;
Um aaseervaatham eenthu,
En paavam manniyum;
Anpodu ennaich serththu,
Thayaalam kaannpiyum.

3. Neer innum ennil kaanum
Pollaangu yaavaiyum
Akattippoda vaarum,
En nenjil thangidum;
Naan ummaip pattik kolla
Karunnai puriyum;
Mikuntha thaalmaiyulla
Siththam kadaashiyum.

4. Nal meetparae, ummodu
Naan aikkiyamaakavum,
Naatooraுm vaanjaiyodu
Ummil nilaikkavum,
Mikuntha anpinaalae
Thunnai seytharulum;
Theyveeka appaththaalae
Neer ennaip poshiyum.

PowerPoint Presentation Slides for the song Aa Yesuvae, Ummaalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆ இயேசுவே உம்மாலே PPT
Aa Yesuvae PPT

மிகுந்த நீர் உம் இயேசுவே உம்மாலே மீட்கப்பட்டவன் திவ்விய ரத்தத்தாலே சுத்தமானவன் கஸ்தியாலே தோஷத்தைத் தீர்த்தீர் உமது சாவினாலே என்னை ரட்சித்தீர் உம்மால் English