பல்லவி
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன்
ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அனுபல்லவி
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்ல
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார்
சரணங்கள்
1. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே;
மாயையில் மனம் இனி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்
2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை – இயேசு
நாதன் என் பக்கமாய் வந்தனரே;
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் – இந்த
பாரதில் எனை வெற்றி சிறக்க செய்தார்
3. அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
பொற்பரன் சேவை என் தாகமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே
4. கானானின் கரை இதோ காண்கின்றதே – எந்தன்
காதலன் தொனி காதில் கேட்கின்றதே;
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம் – விரை
வாக நம் ஓட்டத்தை முடித்திடுவோம்
5. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தாம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்;
உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில்
Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Lyrics in English
pallavi
aananthap paadalkal paadiduvaen – enthan
aaththuma naesaraip pukalnthiduvaen
anupallavi
alaichchalkal yaavaiyum akalach seythaar – nalla
maeychchalil enthanai makilach seythaar
saranangal
1. maeloka naadenthan sonthamathae – intha
pooloka naattamum kuraikintathae;
maayaiyil manam ini vaiththidaamal – naesar
kaayamathai ennnni vaalnthiduvaen
2. nampikkai attaோnaay alaintha vaelai – Yesu
naathan en pakkamaay vanthanarae;
paavangal paarangal parakkach seythaar – intha
paarathil enai vetti sirakka seythaar
3. arputhamaam avar naesamathu – enthan
porparan sevai en thaakamathu
parpala kirupaikal pakarukintar – aelai
karpudan avar panni seythidavae
4. kaanaanin karai itho kaannkintathae – enthan
kaathalan thoni kaathil kaetkintathae;
kaalam ini illai unarnthiduvom – virai
vaaka nam ottaththai mutiththiduvom
5. alaiththavarae avar unnmaiyullor – thaam
alaippathil vilippudan niruththa vallor;
ulaiththiduvom mika ookkamudan – angu
pilaiththidavae anpar samookamathil
PowerPoint Presentation Slides for the song Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் PPT
Aanatha Paadalgal Padiduvean PPT