அக்கினி அபிஷேகம் தந்து
ஆவி பொழிந்திடும்
1. சுட்டெரிக்கும் நல் அக்கினி
சுத்திகரிக்க எம்மையும்
குற்றங்குறைகள் மற்றுங் கறைகள்
முற்றிலும் நீக்கிடுமே – எம்மில் – அக்கினி
2. பற்றினதே வான் அக்கினி
பக்தன் எலியா கூப்பிட
வேண்டுதல் கேட்டு வானந் திறந்து
வல்லமை ஊற்றிடுமே – இன்று – அக்கினி
3. மோசேயுங் கண்ட அக்கினி
முட்செடி மேலே பற்றிட
அற்புத காட்சி தற்பரன் மாட்சி
அண்டிட தந்திடுமே அதை – அக்கினி
4. நாதாப் அபியூ அக்கினி
நாடி அழிந்தால் நஷ்டமே
அந்நிய தீயை பட்சிக்கும் தேவ
ஆவியே வந்தாளும் – நல்ல – அக்கினி
5. மேலறை வந்த அக்கினி
சீஷரை அன்று சந்திக்க
பற்பல பாஷை பேசி மகிழ்ந்த
பக்தி வரம் தாரும் – தேவ – அக்கினி
6. இரண்டு மடங்கு அக்கினி
இந்த கடைசி நாட்களில்
மாம்சமான யாவரின் மேலும்
மாரியுடன் பொழியும் – பின் – அக்கினி
Akkini Abishegam Thanthu அக்கினி அபிஷேகம் தந்து Lyrics in English
Akkini apishaekam thanthu aavi polinthidum 1. Sutterikkum nal akkini suththikarikka emmaiyum kuttanguraikal mattaுng karaikal muttilum neekkidumae – emmil – akkini 2. Pattinathae vaan akkini pakthan eliyaa kooppida vaennduthal kaettu vaanan thiranthu vallamai oottidumae – intu – akkini 3. Mosesyung kannda akkini mutchedi maelae pattida arputha kaatchi tharparan maatchi anntida thanthidumae athai – akkini 4. Naathaap apiyoo akkini naati alinthaal nashdamae anniya theeyai patchikkum thaeva aaviyae vanthaalum – nalla – akkini 5. Maelarai vantha akkini seesharai antu santhikka parpala paashai paesi makilntha pakthi varam thaarum – thaeva – akkini 6. Iranndu madangu akkini intha kataisi naatkalil maamsamaana yaavarin maelum maariyudan poliyum – pin – akkini
PowerPoint Presentation Slides for the song Akkini Abishegam Thanthu அக்கினி அபிஷேகம் தந்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினி அபிஷேகம் தந்து PPT
Akkini Abishegam Thanthu PPT

