Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் — அழைக்கிறார்

2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் — அழைக்கிறார்

3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ — அழைக்கிறார்

4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ — அழைக்கிறார்

5. கல்லறைத் திறக்கக் காவலர் நடுங்கக்
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் , ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே — அழைக்கிறார்

6. சாந்த சொரூபனே ! சத்திய வாசனே !
வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார் — அழைக்கிறார்

Alaikirar Alaikirar Itho Neeyum Vaa – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ Lyrics in English

1. Paavaththai aettavar paliyaay maanndavar kalvaariyin maettinil kannkollaatha kaatchiyae kanndidum , vaenndidum paavappaaram neengidum — alaikkiraar 2. Nnoyaiyum aettavar paeyaiyum ventavar naesar unthan Nnoykalai nichchayamaay theerththaarae Nnoyutta unnaiyae naeyamaay alaikkiraar — alaikkiraar 3. Thunpam sakiththavar , thuyaratainthavar innalutta unnaiyae annnal yaesalaikkiraar thunpuraுm nenjamae thurithamaaka vaaraayo — alaikkiraar 4. Anthak kaedatainthaar alakattaுth thontinaar sonthamaakach sernthida inthap paadatainthaarae ninthikkum unnaiyum santhippaar nee vaaraayo — alaikkiraar 5. Kallaraith thirakkak kaavalar nadungak kasthikalatainthaarae kattukalaraுththaarae uyirththaar , jeyiththaar unndu meetpunakkumae — alaikkiraar 6. Saantha soroopanae ! Saththiya vaasanae ! Vanjamatta vaayanae vanthannaikkum naeyanae thanjamae thannaiyae thanthunai alaikkiraar — alaikkiraar

PowerPoint Presentation Slides for the song Alaikirar Alaikirar Itho Neeyum Vaa – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழைக்கிறார் அழைக்கிறார் இதோ PPT
Alaikirar Alaikirar Itho Neeyum Vaa PPT

அழைக்கிறார் ஏற்றவர் உன்னையே வாராயோ பாவத்தை பலியாய் மாண்டவர் கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே கண்டிடும் வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் நோயையும் பேயையும் வென்றவர் English