Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பர்க்கருள் புரிவோனை

1. அன்பர்க்கருள் புரிவோனை, ஆதியாய் நின்ற சீமானை,
துன்பமகற்றிடுங் கோனை, தூயமனமுளத்தானை,
பொன் பொலியும் பெருமானை, பூரண நேசமுற்றானை,
இன்பமளித்திடுந்தேனை, இலங்குந்திருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

2. சத்தியவாசகப்போதன், சாற்று முரைப்பிடிவாதன்,
பத்திசேர் சற்பிரசாதன், பாவமகற்றும் பொற்பாதன்,
எத்திசையோர் தேடும் நாதன், இந்நிலம் வந்தமா நீதன்,
முத்தியளித்திடு வேதன், மூவாதிருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

3. பாவமகற்று பகாரன், பசாசுகளுக்கபகாரன்,
ஜீவனளிக்கும் உதாரன், தீவினைபோக்குங் குமாரன்,
சாவையழித்தமாவீரன், தாரணியோர்க்குபகாரன்,
தேவ சுரரேத்துந்தீரன், சோதி திருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

4. ஆதியும் அந்தமுமான, அல்பா ஒமேகாவுமான,
நீதி இரக்கமுமான, நித்திய ஜீவனுமான,
ஓதிய வேதமுமான, உத்தம மார்க்கமுமான,
மேதினியிலுருவான மீட்பர் திருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai Lyrics in English

1. anparkkarul purivonai, aathiyaay ninta seemaanai,
thunpamakattidung konai, thooyamanamulaththaanai,
pon poliyum perumaanai, poorana naesamuttaாnai,
inpamaliththidunthaenai, ilangunthirumaeni kanntaen;
kanntaen avar thiruththaekam; kalvaari malaithanil kanntaen.

2. saththiyavaasakappothan, saattu muraippitivaathan,
paththiser sarpirasaathan, paavamakattum porpaathan,
eththisaiyor thaedum naathan, innilam vanthamaa neethan,
muththiyaliththidu vaethan, moovaathirumaeni kanntaen;
kanntaen avar thiruththaekam; kalvaari malaithanil kanntaen.

3. paavamakattu pakaaran, pasaasukalukkapakaaran,
jeevanalikkum uthaaran, theevinaipokkung kumaaran,
saavaiyaliththamaaveeran, thaaranniyorkkupakaaran,
thaeva suraraeththuntheeran, sothi thirumaeni kanntaen;
kanntaen avar thiruththaekam; kalvaari malaithanil kanntaen.

4. aathiyum anthamumaana, alpaa omaekaavumaana,
neethi irakkamumaana, niththiya jeevanumaana,
othiya vaethamumaana, uththama maarkkamumaana,
maethiniyiluruvaana meetpar thirumaeni kanntaen;
kanntaen avar thiruththaekam; kalvaari malaithanil kanntaen.

PowerPoint Presentation Slides for the song அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பர்க்கருள் புரிவோனை PPT
Anbarukarul Purivonai PPT

கண்டேன் திருத்தேகம் கல்வாரி மலைதனில் திருமேனி அன்பர்க்கருள் புரிவோனை ஆதியாய் நின்ற சீமானை துன்பமகற்றிடுங் கோனை தூயமனமுளத்தானை பொன் பொலியும் பெருமானை பூரண நேசமுற்றானை இன்பமளித்திடுந்தேனை English