அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten
பல்லவி
அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்;
மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன்
அனுபல்லவி
சற்றாகிலும் கிருபை பெற
முற்றும் அபாத்திரனான போதும்
சரணங்கள்
1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும்
பலவித மாமிச சிந்தைகளும்
பாவி என்னிதயத்தை வதைத்தபோது
பாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் – அற்
2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டு
வாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்;
நீண்ட ஜெபங்களைச் செய்வதினால்
மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் – அற்
3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டு
துன்மார்க்கப் பாதையில் தாம் நடந்து
வேதப் புரட்டாய்த் திரிந்தவரின்
ஓதுதல் கேட்டு நான் கெட்டலைந்தேன் – அற்
4. நான் செய்த தீவினையுணர்ந்து எந்தன்
வான பிதாவண்டை ஓடி வந்து
மெய் மனஸ்தாப அழுகையுடன்
ஐயனே! இரட்சியும் என்றவுடன் – அற்
5. இந்த மா இரட்சையை நம்பாயோ நீ?
வந்து பார் மீட்பரின் சிலுவையண்டை!
ஓடுகின்ற இந்த சிவந்த நதி
தேடி வருவோர்க்கு உயிரைத் தரும் – அற்
அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham Paavi Naan Meetkapaten Lyrics in English
Arputham paavi naan meetkappattaேn – Arputham paavi naan meetkapaten
Pallavi
Arputham! Paavi naan meetkappattaேn;
Meetkappattaேn naan iratchikkappattaேn
Anupallavi
Sattaாkilum kirupai pera
Muttaுm apaaththiranaana pothum
Saranangal
1. Ulakaththin sittinpap paasangalum
Palavitha maamisa sinthaikalum
Paavi ennithayaththai vathaiththapothu
Paava vimosanaar kirupai koornthaar – ar
2. Maaymaala jeeviyam seythukonndu
Vaayppaechchinaal mattum poosai seythaen;
Neennda jepangalaich seyvathinaal
Meenndu moksham pokak kaaththirunthaen – ar
3. Sanmaarkka vaeshaththaith thariththukkonndu
Thunmaarkkap paathaiyil thaam nadanthu
Vaethap purattayth thirinthavarin
Othuthal kaettu naan kettalainthaen – ar
4. Naan seytha theevinaiyunarnthu enthan
Vaana pithaavanntai oti vanthu
Mey manasthaapa alukaiyudan
Aiyanae! Iratchiyum entavudan – ar
5. Intha maa iratchaைyai nampaayo nee?
Vanthu paar meetparin siluvaiyanntai!
Odukinta intha sivantha nathi
Thaeti varuvorkku uyiraith tharum – ar
PowerPoint Presentation Slides for the song அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham Paavi Naan Meetkapaten
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் PPT
Arputham Paavi Naan Meetkapaten PPT

